(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 47 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

ங்கே அந்த பேப்பர்?” சக்தி யோசனை மின்ன அபினவிடம் கேட்டாள்!

  

“தேன் சார் கிட்ட இருக்கு சக்தி மேடம். அவர் எடுத்துட்டு ஸ்டேஷன் போயிருக்கார். அவர் அஹல்யாக்கு எதிரா ஹார்ட்ப்ரூஃப் ஏதாவது கிடைக்குமான்னு தேடிட்டு இருந்தார். இப்போ நானே இதைக் கண்டுப்பிடிச்சு அவர் கையில கொடுத்திட்டேன்!” அபினவ் வருத்தத்துடன் புலம்பினான்!

  

“அபினவ்!” சக்தி அதிகாரமான தோரணையில் அவனை அழைத்தாள். அபினவ் நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.

  

“நல்லா யோசிச்சு சொல்லுங்க! அந்த பத்திரத்துல அஹல்யாவோட சைன் இருந்துச்சா??”

  

“அதெல்லாம் தெரியலை மேடம். முதல் பேஜ் மட்டும் தான் கிடைச்சது!”

  

“அந்த பேப்பரை எங்கே இருந்து எடுத்தீங்க?”

  

“இதோ இங்கே இருந்து மேடம். தேன் சாரும் இதையே தான் கேட்டார். வேற பேப்பர் இருக்கான்னும் தேடிப் பார்த்தோம். வேற இல்லை!”

  

“ஓகே அபினவ், தேங்க் யூ! சத்யா, வா, நாம போகலாம். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு,” சக்தி நிற்காமல் பேசிக் கொண்டே நடந்தாள்!

  

சத்யாவும் அவளுடன் சென்றாள்.

   

ஹாஸ்பிட்டலில் இருந்து வேகமாக கிளம்பிய சக்தியின் ஜீப் நேராக சத்யா வீட்டின் முன் வந்து நின்றது.

  

“இன்னைக்கு அஹல்யாக்கு ஸ்கூல் இருக்கா சத்யா?” சக்தி ஜீப்பில் இருந்து இறங்கும் முன் கேட்டாள்!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.