(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“செகன்ட் சாட்டர் டே சக்தி. அவங்களுக்கும் லீவ் தான்!” சத்யா சக்தியை கேள்வியுடன் பார்த்துக் கொண்டே சொன்னாள்!

   

சக்தி வேறு கேள்விகள் கேட்காமல் ஜீப்பில் இருந்து இறங்கினாள்.

   

"வீட்டுக்கு வா சக்தி! முதல்ல சாப்பிடு, அப்புறமா பொறுமையா அஹல்யா கிட்ட பேசலாம்!" சக்தி அஹல்யாவிடம் கடுமையாக பேசி விடக் கூடாதே என்ற கவலையில் அழைத்தாள் சத்யா.

  

“இப்போ வேண்டாம் சத்யா!” சக்தி நேரே அஹல்யா தங்கி இருந்த போர்ஷனுக்கு சென்று கதவை தட்டினாள்.

  

உள்ளே இருந்து சத்தம் எதுவும் வரவில்லை! சக்தி சத்யாவை பார்த்தாள்.

   

புரிந்துக் கொண்டு, “அஹல்யா! நான் தான் சத்யா. சக்தியும் இருக்காங்க. கதவை திறங்க,” என சத்யா குரல் கொடுத்தாள். அடுத்த விநாடி கதவு திறந்தது.

  

“நீங்க ஹாஸ்பிட்டல்...“ அஹல்யாவை முழுவதுமாக பேச சக்தி அனுமதிக்கவில்லை.

  

“அஹல்யா, என்னையும் சத்யாவையும் நம்பி நான் கேட்குறதுக்கு இப்போ பதில் சொல்லுங்க!”

  

அஹல்யா குழப்பத்துடன் விழித்தாள்.

  

“நீங்க முதல் முதல் சேகரனை எங்கே சந்திச்சீங்க?”

  

அஹல்யா பதில் சொல்ல தயங்குவது அவளுடைய முகத்தில் தெரிந்தது.

  

“அஹல்யா, சக்தியும் நானும் உங்களுக்கு உதவி செய்ய தான் ட்ரை செய்றோம். சக்தி கேட்குற விபரத்தை சொல்லுங்க. அது உங்களுக்கு தான் நல்லது,” சத்யா மென்மையாக அஹல்யாவிற்கு எடுத்து சொன்னாள்!

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.