“கூல் சத்யா! நான் கிளம்புறேன். அந்த கவர் கிடைச்ச உடனே என் மொபைல் ஃபோன்க்கு கால் செய் சத்யா!” சொல்லி விட்டு சக்தி மீண்டும் ஜீப்பில் ஏறினாள்.
“நீ யாரைப் பார்க்க போற, எங்கே போறேன்னு சொல்ல மாட்ட. நான் மட்டும் உனக்கு சொல்லனுமா? சொல்ல மாட்டேன் போ!”
“நான் ஒரு கவர்ன்மென்ட் அஃபிஷியலை பார்க்க போறேன் சத்யா. அவர் வீடு இங்கே இருந்து தூரம். 100 கிலோமீட்டர் மேல இருக்கும். அதான் நான் தனியா போறேன். மீதி விஷயத்தை வந்து சொல்றேன்!” வேக வேகமாக பேசினாள் சக்தி!
“சரி சக்தி! இப்போ அஹல்யா சொன்ன அந்த கவர் தான் திருட வந்தவன் தேடினதா??” ரகசியக் குரலில் கேட்டாள் சத்யா.
“அப்படி தான் நினைக்கிறேன் சத்யா!”
“அதுல என்ன இருக்கும்னு நினைக்கிற???”
“சொத்து சம்மந்தப்பட்ட டீடெயில்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க இரண்டுப் பேரும் அந்த கவரை கண்டுப்பிடிச்சு எடுத்தா தான் கரக்ட்டா தெரியும். பத்திரம் சத்யா! இன்ஸ்பெக்டர் கிட்ட திட்டு வாங்குற நிலைமைக்கு என்னை கொண்டு வந்து விட்டுறாதே. அஹல்யா வேற கூட வரா. அப்புறம் அபினவ் வேற இன்னொரு பக்கம் இருந்து திட்டுவான்!”
“ஹ்க்கும்! எப்போவும் போற இடம். சவீதா வீட்டுக்கு எதிர் வீடு. ஒரு பயமும் இல்லை. நீ பார்த்து ட்ரைவ் செய். போலி டாக்டர் அப்புறம் என்னை திட்டப் போறார்!”
“அவன் திட்டுறானோ இல்லையோ, நீ இப்படி பேசினா நான் திட்டுவேன்!”
“சரி சரி டென்ஷன் ஆகாத. கிளம்பு!”