(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

   

“ஐ ஸீ! அந்த வீட்டுல அந்த பேப்பர்ஸ் எங்கே வச்சிருக்கீங்க?”

  

“அருணோட டிரஸ் எல்லாம் வச்சிருந்த இடத்துல வச்சிருக்கேன். எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க?”

  

“நான் சொல்றேன் அஹல்யா. எனக்கு ஒரு உதவி செய்றீங்களா? அந்த வீட்டுக்குப் போய் அந்த கவரை எடுத்து தரீங்களா?”

  

“அங்கே தனியா போக என்னவோ பயமாருக்குங்க சக்தி. அபினவ்க்கு இன்னைக்கு பந்தோபஸ்த் ட்யூட்டி இருக்கு. அவர் வந்ததும், நாளைக்கு எடுத்து தரவா?”

  

“அபி இல்லைனா என்ன அஹல்யா? நானும் சக்தியும் இருக்கோம். நாம போகலாம்,” என்றாள் சத்யா!

  

“இல்லை சத்யா. எனக்கு வேற ஒரு வேலை இருக்கு. நான் ஒரு ஃப்ரென்டை பார்க்க இப்போ கிளம்ப போறேன்,” என்றாள் சக்தி.

  

“சரி, பரவாயில்லை! நீ போ! நாம இரண்டுப் பேரும் போகலாம் அஹல்யா,” என்றாள் சத்யா!

  

“டெஸ்ட் பேப்பர் கரக்ஷன் முடிக்கனும். மூணு கிளாஸ். நிறைய பேப்பர் இருக்கு!” அஹல்யா சாக்கு போக்கு சொல்லும் குழந்தைப் போல சொன்னாள்.

  

“நீங்க அதெல்லாம் முடிங்க அஹல்யா. நாம டின்னர் சாப்பிட்டு பொறுமையா போகலாம். ஷாலினி அவ ஃப்ரென்ட் பர்த்டேக்கு போறா. அருணையும் கூட கூட்டிட்டுப் போக சொல்றேன். நாம அந்த வீட்டுக்கு போய், கவரை எடுத்துட்டு வரும் பொது பசங்க இரண்டுப் பேரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருவோம்!”

  

சத்யா இன்ஸ்டன்ட் ஆக ப்ளான் செய்யவும், வேறு வழி இல்லாமல் சரி என தலை அசைத்தாள் அஹல்யா!

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.