”யாராவது இருக்கீங்களா” என சத்தமாக அழைக்க மூர்த்தியோ
”நான்தானே முதல்ல பேசனும்”
”ஏன்டா அறிவில்லாதவனே, நான் எங்கடா பேசி வைச்சேன், யாரும் இல்லையேன்னு கூப்பிட்டா அதுவும் தப்பாடா, சரி நீயே கூப்பிடு யார் வர்றாங்கன்னு பார்க்கலாம்” என சொல்ல மூர்த்தியும்
”சார் சார் மேடம்” என அழைக்க வீரசிங்கமோ
”இப்ப எதுக்கு சேல்ஸ்மேன் போல கூப்பிடற”
”சும்மாயிருங்களேன்” என எரிச்சலையடைய
”டேய் இதெல்லாம் உன் வீட்டோட வைச்சிக்க, என்கிட்ட வைச்சிக்கிட்ட பல்லை தட்டிடுவேன்” என மிரட்டிவிட்டு பார்க்க மூர்த்தி கப்சிப் என அமைதியானான்.
அதற்குள் மஹதியின் பெற்றோர் வந்தனர். பார்க்கவே படு டீசன்டாக இருந்தார்கள். வந்தவர்கள் இவர்களைப் பார்த்து வியந்தார்கள்
”யார் நீங்க” என மஹதியின் தந்தை மகேந்திரன் கேட்க அதற்கு வீரசிங்கம் வாய் திறப்பதற்குள் மூர்த்தி முந்திக் கொண்டான்
”நாங்க காரைக்குடியில இருந்து வரோம், என் பேரு மூர்த்தி, இவர் பேரு வீரசிங்கம் உங்க பொண்ணு மஹதியை பத்தி பேசதான் அவசர அவசரமா வந்தோம், வாங்களேன் உட்கார்ந்து பேசலாம்” என பரபரப்பாக அழைக்க மகேந்திரனோ திகைத்தபடியே அங்கிருந்த சோபாவில் அமர அதற்கு முன்னே வீரசிங்கம் இன்னொரு இருக்கையை ஆக்கிரமித்து அமர்ந்திருந்தார்
மஹதியின் தாய் சாந்தியோ வந்தவர்களுக்கு முதலில் ஜுஸ் கொண்டு வந்து தர அதை வாங்கி இருவரும் பருகினார்கள். சாந்தியும் தன் கணவரின் பக்கம் அமர்ந்துக் கொண்டதும்