அவளோட குணம் எனக்கு நல்லாவே தெரியும், எப்படியிருந்தாலும் அவள் மூர்த்தியைதான் கட்டிக்குவா, இப்ப என்ன பிரச்சனைன்னா என் பையன் ரொம்ப மனசு உடைஞ்சிப் போயிருக்கான், அவனுக்கு ஆறுதால இப்ப உங்க பொண்ணுதான் இருக்கா
உங்க பொண்ணு இரக்கப்பட்டு எல்லாம் என் மகனை ஏத்துக்கலை, அவனைப் பார்த்த உடனே காதல் வந்திருக்கு, அந்த காதலுக்காக அது இதுன்னு நாடகமாடி முடிவுல எப்படி எப்படியோ போயிடுச்சி, நடந்தது உங்களுக்கு சொல்லியாச்சி, இனி நடக்கப் போறதை நீங்கதான் சொல்லனும்” என பேசி முடித்தார்
இருவரின் பேச்சையும் கேட்டு மஹதியின் பெற்றோர் மிகவும் குழம்பியிருந்தார்கள், மூர்த்தி தனக்காக மஹதியை பேசினான் வீரசிங்கம் மஹதிக்காக தன் மகனை பேச வந்தார், இருவருக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தார்கள், அவர்களின் சங்கடத்தைப் புரிந்துக் கொண்ட வீரசிங்கமோ
”ஒண்ணும் அவசரமில்லை இது உங்க பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை, எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்க முடியாது, ஒண்ணு உங்க பொண்ணுகிட்ட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க, இல்லையா இப்பவே என்னோட கிளம்பி காரைக்குடி வாங்க, அங்க வந்துப் பாருங்க அப்ப இன்னும் உங்களுக்கு எல்லாம் தெளிவா விளங்கும், என்ன சொல்றீங்க” என கேட்க மூர்த்திக்கு திக்கென்றது.
”இவர் என்ன இப்படி பேசறாரு, இவங்க அங்க வந்தா ஜானகியிருக்காளே அய்யோ காரியமே கெடுமே, இப்ப என்ன செய்றது இவங்களை தடுத்து நிப்பாட்டலாம்” என நினைத்தவன் அவர்களிடம்
”இதப்பாருங்க அங்க வர்றதெல்லாம் வேஸ்ட், பேசாம மஹதிக்கு போன் பண்ணி இங்க வரவழைங்க, ஏற்கனவே அவளுக்கு பார்த்த வரன் நான்தானே உங்க முடிவுக்காக இங்க வந்தேன், வேணும்னா எங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து மஹதியை பொண்ணு கேட்கறேன், அதை விட்டுட்டு ஏற்கனவே கல்யாணம் ஆனவனுக்கு எதுக்கு உங்க பொண்ணை தரனும், பாவம் அவள் ஏதோ ஒரு பரிதாபத்தில அவனை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறா, அது தப்புன்னு நீங்க சொல்லிட்டா அவள் புரிஞ்சிக்குவா, புத்திசாலி பொண்ணாச்சே என்ன சொல்றீங்க, உங்க பொண்ணை இங்க கூப்பிட்டுக்கிறீங்களா” என சொல்ல அவர்களோ