காட்டிக்க என்னை விட்டுடு ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்சியபடி சொல்லிவிட்டு சட்டென அந்த அறைக்கதவை திறந்துக் கொண்டு வெளியேறி சென்றான் கோவலன்.
அவன் சென்றதும் கண்ணகியின் உடல் அதிர்ந்தது, நிற்க இயலாமல் தொப்பென தரையில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாள்.
கோவலனோ கண்ணகியை விட்டு வந்தாலும் குழப்பமாக இருந்தான், தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்யலாம் என்றுதான் யோசித்தான், அவனால் சரியாக முடிவு எடுக்க இயலவில்லை, சரி வழக்கம் போல நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டுப் பார்க்கலாம் என முடிவு எடுத்தான்
தலை விழுந்தால் தன் விருப்பம் மாதவியிடம் செல்வோம், பூ விழுந்தால் கண்ணகியுடன் வாழ்க்கை என நினைத்து சுண்ட அந்த நாணயமோ பூ பக்கம் விழுந்தது, எப்போதும் நாணயத்தின் முடிவை தன் முடிவாக ஏற்று நடக்கும் கோவலனோ இந்த முறை அந்த நாணயத்தின் மீது கோபம் கொண்டு அதை விட்டெறிந்தான். இனி அவனுக்கு அந்த நாணயம் தேவைப்படவில்லை.
இனி நாமே முடிவு எடுக்கலாம் நம் வாழ்க்கைதான் முக்கியம் என சுயநலமாக எண்ணி மாதவியை தேடி வீட்டை விட்டு சென்றான். அவன் சென்றதை பார்த்தபடி பதட்டமாக கண்ணகியை தேடி வந்தார் ஈஸ்வரமூர்த்தி. கண்ணகி அழுது கொண்டிருப்பதைக்கண்டு அவர் மனம் துடித்துப்போனது
”கண்ணகி என்னம்மா என்னாச்சி ஏன் இப்படியிருக்க” என கேட்க அவளோ அவரை ஏறிட்டுப் பார்த்து கண்ணீருடன்
”பரிகாரம் செய்ய என் வாழ்க்கைதான் கிடைச்சதா உங்களுக்கு” என கேட்க
”ஓ எல்லாத்தையும் சொல்லிட்டானா“
”ஆமாம் கூடவே அவருக்கு என்னை பிடிக்கலைன்னும் சொல்லிட்டு அவரோட காதலியை