தப்பாயிருக்கு” என நினைத்துக் கொண்டே அவனும் அந்த வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க உள்ளே கோவலனோ மண்டியிட்டு மாதவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் அவளோ அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்
”இதெல்லாம் தப்பு நீங்க இங்க வந்திருக்க கூடாது, கோவலன் முதல்ல இங்கிருந்து வெளிய போங்க ப்ளீஸ்” என அவள் கெஞ்ச அவனோ கேட்கவில்லை
”எனக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலை, தாத்தாவோட ப்ளாக்மெயில் காரணமாதான் நான் இதை செய்துக்கிட்டேன் ஆனா என் மனசுல நீ மட்டும்தான் இருக்க மாதவி”
”ப்ளாக்மெயிலா என்னது அது” என கேட்க அவனும் நடந்ததை அப்படியே ஒப்பவித்துவிட்டு அழுதான்
”பார்த்தியா என் நிலைமையை விரும்பின பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியலை, தப்புக்கான பிராயசித்தமா நடந்த கல்யாணத்துலயும் விருப்பம் இல்லை, கண்ணகியோட வாழவும் பிடிக்கலை அவளைப் பார்க்கறப்ப தாத்தா என்னை ப்ளாக்மெயில் செய்தது என்னால அவளோட அப்பா அம்மா இறந்துப் போனதுதான் நினைவுக்கு வருது, என்னால அவளோட எப்பவுமே வாழ முடியாது”
”அதுக்காக இங்கயா வரனும்”
”என் மனசு இங்கதான் இருக்கு, உன்கூட வாழதான் நான் ஆசைப்பட்டேன் மாதவி, நான் உன்னை காதலிக்கிறேன் என்னை ஏத்துக்க“
”புத்திக்கெட்டுப் போச்சா உங்களுக்கு இன்னிக்கு காலையில உங்களுக்கு கல்யாணம் ஆச்சி, இந்த நேரத்தில நீங்க என்கூட இருந்தா தப்பாயிடும், உங்களை உங்க வீட்ல தேடுவாங்க கிளம்புங்க இங்கிருந்து“
”மாதவி ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கற, கண்ணகியோட நடந்த கல்யாணம் வெறும் நான் செய்த தப்புக்கான பிரயாசித்தம்தான், தாத்தா மிரட்டினாரு அதனால கட்டிக்கிட்டேன் ஆனா என்னோட வாழ்க்கை உனக்கானது மாதவி, நான் உன்கூடதான் வாழ்வேன் நீயும்