எனக்கு இல்லைன்னா நான் செத்துடுவேன் மாதவி” என கதற அவளுக்கு அச்சமே எழுந்தது
இது பற்றி யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் விளித்தாள். கண்ணகிக்கு தகவல் சொல்வோமா என்றுகூட யோசித்தாள் ஆனால் தோழியே தனக்கு சக்காளத்தியாக வந்துவிட்டாளே துரோகி என எண்ணிவிடுவாளோ என்ற பயத்தில் அமைதியானாள்.
கோவலனோ சட்டென மாதவியை கட்டியணைத்துக் கொண்டு
”மாதவி ஐ லவ் யூ மாதவி என்னை ஏத்துக்க” என சொல்ல அவள் அரண்டாள் அவனை விட்டு விலக முயன்றாள்
”உன்னை நான் எந்தளவுக்கு விரும்பறேனா உனக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டு வர்ற அளவுக்கு” என்றான் அவளுக்கோ பயம் அதிகரிக்கத் தொடங்கியது
”எனக்கு யாரும் வேணாம், தாத்தா வேணாம், கம்பெனி வேணாம் பணம் புகழ் எதுவும் வேணாம், எனக்கு நீ மட்டும் போதும் மாதவி உன்னை பார்த்துக்கிட்டே நான் வாழ்ந்து முடிச்சிக்குவேன்” என கோவலன் சொல்ல மாதவிக்கு பேசவே வாய் எழவில்லை, அவனை தள்ளிவிட முயன்றாள் ஆனால் முடியவில்லை, அதில் முயற்சி செய்துக் கொண்டிருக்க அவனோ பேசிக் கொண்டே இருந்தான்.
”முதல்ல இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், அது காதலா மாறின பின்னாடி அதை உன்கிட்ட சொல்ல நினைக்கறப்ப நீ என்னை விட்டு போயிட்ட, சரி எப்படியாவது என் காதலை உனக்கு சொல்லி புரிய வைக்கலாம்னு பார்த்தா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, ஆனா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை வாழ்ந்தா நான் உன்கூடதான் வாழ்வேன் மாதவி, ப்ளீஸ் என்னை ஏத்துக்க ப்ளீஸ்” என அவன் கெஞ்ச கெஞ்ச அவளோ அதிர்ந்தாள்
”இது தப்பு உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி உங்க மனைவிக்கு துரோகம் இழைக்காதீங்க என்னை விட்டுடுங்க”
”உன் மனசுல நான்தான் இருக்கேன்”