இவனை என்ன செய்வது?!?!
தலையை பிடித்துக் கொண்டவள், மெல்ல தன்னை தானே நிதானப் படுத்திக் கொள்ள முயன்றாள்!
பவித்ராவிடம் மனம் விட்டு பேசினால் தெளிவு கிடைக்கலாம்.. ஆனால் பவித்ராவிடம் என்ன பேசுவது, எதை எல்லாம் சொல்வது?
இப்படி மனதில் பல விஷயங்களை யோசித்தப்படி இரவு முழுக்க தூங்காமல் கழித்த பாரதி, காலை ஐந்து மணிக்கே எழுந்து அவசரமாக கிளம்பினாள்!
முடிந்த அளவில் சத்தம் செய்யாமல் நடந்தவள், கட்டிலின் ஓரத்தில் சுவரை பார்த்து படுத்து தூங்கி கொண்டிருந்த விவேக்கை, நின்று ஒரு சில மணித்துளிகள் பார்த்தாள்... தூக்கத்தில் கூட அவளின் பக்கத்தில் வந்து விடக் கூடாது என்று அவன் அப்படி படுத்திருப்பது அவளுக்குப் புரிந்தது...
மனதில் வலி தோன்ற, அவனின் முகத்தைப் பார்த்தாள்... தானாக அவளின் மனம் கனிந்தது...!!! தூக்கத்தின் காரணமாக அமைதியாக தெரிந்த அந்த முகம், பால் மணம் வீசும் பச்சிளம் குழந்தையை அவளுக்கு நினைவுபடுத்தியது... இவன் கெட்டவனாக இருக்க வாய்ப்பே இல்லை...!!!!
அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரங்களையும் தாண்டி பாரதிக்கு சிரிப்பு வந்தது! அவள் எப்போதிருந்து 'ஃபேஸ்-ஸாலாஜி' எக்ஸ்பர்ட் ஆனாள்!!!!
இருந்தாலும், அவளின் கண்கள் என்னவோ இப்போதும் விவேக் மீது தான் இருந்தது... கணவனை பல நாட்களுக்கு பிறகு நேராக பார்க்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்கள் அவனை பார்த்து ரசித்தவள், நேரமாகி கொண்டிருப்பதை உணர்ந்து, மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்... விவேக்கை பார்த்தப்படியே மணிக் கணக்கில் நிற்கலாம் தான்... ஆனால் அவளுக்கு முக்கிய வேலை இருக்கிறதே...!!!