“எங்கேயோ போனேன்...”
பாரதி அசட்டையாக பதில் சொல்லவும், விவேக் கோபத்தை கட்டுப்படுத்த முயல்பவனைப் போல பற்களை கடித்துக் கொண்டே அவளைப் பார்த்து முறைத்தான்!
பாரதியின் பொறுமை இப்போது காற்றில் பறந்துப் போனது!
“நான் எங்கே போனா உங்களுக்கு என்ன மிஸ்டர் விவேக்? உங்களுக்கு நீங்க ஆசை பட்ட பணம் கிடைச்சாச்சு... உங்க ட்ரீம் கம்பெனி ஸ்டார்ட் செய்தாச்சு... உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நண்பர் மற்றும் நண்பிகளோடு சந்தோஷமா கொண்டாட வேண்டியது தானே? நான் இருந்தா உங்களுக்கு என்ன, இல்லைன்னா உங்களுக்கு என்ன? நான் செத்துப் போனா கூட...”
“என்ன பேசுற, வாயை மூடு!”
விவேக் கத்திய விதத்தில் பாரதி திகைத்துப் போய் பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு நிற்கவும், அவசரமாக யோசித்து,
“ஃபர்ஸ்ட் இன்னிங்க்ஸ் ஃப்ளாப் ஆகி செகன்ட் இன்னிங்க்ஸும் சரி இல்லைன்னு, தர்ட் இன்னிங்க்ஸ் ரெடி செய்ய கிளம்பிட்டீயோ?” என்றான் விவேக் ஏளனமாக!
பாரதிக்கு அவனின் நடவடிக்கைகள் குழப்பத்தை அதிகரித்தது... சில வினாடிகள் அமைதியாக விவேக்கையே கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றவள்... அவன் பேசிய பேச்சிற்கு அப்படி மெளனமாக நிற்பது சரி இல்லை என தோன்றவும்,
“தர்ட் இன்னிங்க்ஸ் மட்டும் இல்லை, ஃபோர்த், ஃபிஃப்த் எல்லாம் கூட ரெடி செய்ய தான் போறேன்... உங்களை போல் நோஸ் கட் யாரும் தந்துறக் கூடாது இல்லையா? ப்ளான் எ, பி, சி ன்னு எல்லாம் ரெடி செய்து வைக்கப் போறேன்... சந்தோஷமா? நீங்களே தான் நான் எப்படி வேணா இருக்கலாம்னு பர்மிஷன் கொடுத்துட்டீங்களே! சரி நீங்க உங்க வேலையை கண்டின்யூ செய்ங்க... நான் என் வேலையைப் பார்க்கிறேன்...” என்றாள் அமர்த்தலாக!