(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

பாரு!!! நீயா இப்படி பேசுற? உன்னை கை நீட்டி அடிச்சதுக்கு, திரும்ப பளார்ன்னு ஒரு அறை வைக்காம... ப்ச்... அப்போ, இது தான் விதின்னு சொல்லி அங்கேயே விவேக் சொனனது போல் இருக்கப் போறீயா?”

  

உடனடியாக பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த பாரதி... சில நொடிகளுக்குப் பிறகு தோழியை நேராக பார்த்தாள்...

  

இல்லை பவி... அப்படி எல்லாம் இருக்க மாட்டேன்... ஆனால், உடனே எதையும் செய்யவும் எனக்கு விருப்பமில்லை... விவேக்கோட அம்மா சொல்றதுப் போல அவங்க குடும்பத்தைப் பத்தி இது வரைக்கும் யாருமே தப்பா எதுவும் சொன்னதில்லை... என்னால அப்படி ஒன்னு நடக்க நான் விட மாட்டேன்..."

   

"என்ன பேசுற பாரு நீ?? புரிஞ்சு தான் பேசுறீயா?"

   

"இல்ல பவி... விவேக் நல்லவரோ கெட்டவரோ, அவரோட அப்பா, அண்ணன், உமா, மது எல்லோருமே நல்ல மாதிரி... நான் ஏதாவது செய்ய போய் அவங்க எல்லோரும் அசிங்கப் படுற மாதிரி ஆறது எனக்கு விருப்பமில்லை..."

   

"அப்போ அவங்க கிட்டேயே விவேக் சொன்னதை எல்லாம் சொல்லி, விவேக் கிட்ட பேச சொல்ல வேண்டியது தானே??"

   

"அது சரியா தப்பான்னு எனக்கு தெளிவா ஒரு ஐடியா வர மாட்டேங்குது பவி... நீ நிறைய தடவை விவேக்குக்கு ரெகமென்ட் செய்திருக்க... ஆனால் எப்போதாவது... ஒரே ஒரு தடவையாவது அவரை தப்பா நினைச்சிருக்கீயா?"

   

பவித்ரா அலுப்புடன் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள்!

   

"ப்ச்... நீ இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னப்போ, நான் யோசிச்சிருந்திருக்கனும்... விவேக் பேசினது பொய்யா இருக்கும்னு நான் பேச்சுக்கு கூட நினைச்சுப் பார்க்கலை பாரு..."

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.