பாரதி பேசி முடிக்க காத்திருக்காமல்,
“ஆமாம்... இதுக்கு எல்லாமா சேர்த்து டாக்ஸோட பில் போட்டு உன் கிட்ட இருந்து வாங்கிக்குறேன்!!! லூசா நீ??? நான் அத்தை கிட்ட ஏதாவது ரீசன் யோசிச்சு சொல்லிட்டு உனக்கு ஃபோன் செய்றேன்... நீயும் அங்கே சொல்லிட்டு கிளம்பி வந்துடு...” என்றாள் பவித்ரா.
“ம்ம்ம்...”
“ரொம்ப யோசிக்காதே பாரதி... நரேந்திரன் சார் கிட்டேயும் கற்பகம் மேடம் கிட்டேயும் கூட ஏதாவது ரீசன் சொல்லிக்கலாம்... நீ இப்படியே குழப்பத்தோட இருக்குறது நல்லதில்லை...”
“சரிப்பா... நீ சொல்றதும் சரி தான்... ரொம்ப தேங்க்ஸ் பவி...!”
🌼🌸❀✿🌷
காலை உணவு உண்ண வந்த விவேக்கின் கண்கள் அவசரமாக நான்கு பக்கமும் சுற்றி மனைவியை தேடியது... பாரதி எங்கே போய் விட்டாள்?
“வா விவேக், இப்போ தான் நீயும் பாரதியும் வந்தா, எல்லோருமா சேர்ந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட மாதிரி இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன்... ஆமாம் பாரதி எங்கே?” என்று மகனிடம் கேட்டாள் கற்பகம்.
அவனும் காலையில் இருந்து அந்த கேள்விக்கு பதில் இல்லாமல் தானே குழம்பிக் கொண்டிருக்கிறான்...!!!
விவேக் அமைதியாக இருப்பதை கவனித்து விட்டு,
“அண்ணி கோவிலுக்கு போயிருக்காங்க அம்மா...” என்று பதில் சொன்னாள் மது.