பாரதி பவித்ராவை யோசனையுடன் பார்த்தாள்... அவளுக்குள் இருக்கும் பல குழப்பங்களில் இதுவும் கூட ஒன்று...
"பவி, எனக்கு ஒன்னு சொல்லு... உன்னை ஒருத்தர் பேசி ஏமாத்துறது அவ்வளவு ஈஸியா?"
“இல்லை... ஆனால், என்னையும் ஏமாத்த கூடிய திறமை உள்ளவங்க இருப்பாங்க தானே?”
“ம்ம்ம்... இருக்கலாம்... ஆனால் ரமேஷ் அண்ணா??? அவர் விவேக் பத்தி எத்தனைப் பேர் கிட்ட விசாரிச்சார்! எல்லோரும் நல்லதா தானே சொன்னாங்க? யாருமே தப்பா சொல்லலை தானே?”
“அவங்க எல்லாருமே விவேக்கோட ஃப்ரென்ட்ஸ் தானே பாரு! அதுவும் இல்லாம விவேக்கோட குடும்பம் பணக்கார குடும்பம்... மத்தவங்களுக்கு அவங்களுடைய தேவை ஏதாவதும் இருந்திருக்கலாம்...”
“ம்ம்ம்ம்... எனக்கு என்னவோ எதுவோ சரி இல்லைன்னு தோணுது பவி... அங்கே அந்த வீட்டில் இருந்து சரியா யோசிக்க முடியலை... தலையே வெடிச்சிடும் போல இருக்கு...!!!”
தோழியை சந்தேகமாக பார்த்த பவித்ரா,
“நீ என்ன நினைக்குற பாரு? என்றாள்.
“எனக்கே சரியா தெரியலை பவி... ஒருவேளை பாலா ஏதாவது தப்பா சொல்லி இருப்பானோன்னு தோணுது... இல்லைனா திரும்ப வந்திருக்க அவருடைய பழைய ஃபிரென்ட் லாவண்யா கூட காரணமா இருக்கலாம்... ஆனால் விவேக் சொல்லும் காரணம் உண்மையில்லை... அது மட்டும் எனக்கு நல்லா புரியுது...”
“ம்ம்ம்...”
“எது உண்மை எது பொய்ன்னு எனக்கு தெரியலை... ஆனால், விவேக் பணத்துக்காக இவ்வளவு