மர்ம உருவம் கீழே விழுந்து இருந்த ரிமோட்டை எடுத்து அந்த அறையில் எரிந்துக் கொண்டிருந்த பல்பின் மேலே குறி பார்த்து சரியாக எரிந்தது. பல்ப் சுக்கு நூறாக வெடித்து விழுந்துப் போனது. மீண்டும் அங்கே இருள் படர்ந்தது!
“உன் கையில இருக்குறதை என் கிட்ட கொடு!” ஒரு கையில் கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டே இன்னொரு கையை அஹல்யாவிடம் நீட்டியது உருவம்.
எதிர்பாராமல் வந்து கத்தியை நீட்டிய உருவத்தை பார்த்து மூன்றுப் பெண்களும் பயந்து போயிருப்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. அனிச்சை செயலாக மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து நின்றார்கள்.
அவர்கள் கண்ணில் தெரிந்த பயம் அதற்கு திருப்தியைக் கொடுத்தது.
“கொடு என் கிட்ட!” மீண்டும் மிரட்டியது உருவம்.
அஹல்யா நடுங்கும் கையுடன் கையிலிருந்த பிளாஸ்டிக் கவரை அதன் பக்கம் கொடுத்தாள்.
குரலை வைத்து அவர்களை மிரட்டுவது ஒரு ஆண் என்ற அளவிற்கு ஊகித்த சத்யாவிற்கு, இருட்டில் நின்றவனின் முகம் தெரியவில்லை! ஆனால் அந்த குரல் அவளுக்கு பரிச்சயமானதாக தோன்றியது. யார் என்று சட்டென்று அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை!
அஹல்யா கையிலிருந்த கவரை அவன் வாங்கியப்போது, சவீதா யார் என்று தெரியாத அந்த மர்ம மனிதனை கைகளால் தள்ளி விட முயற்சி செய்தாள். ஆனால், அதற்கும் தயாராக இருந்த அவன், சவீதாவை கத்தி இருந்த கையாலே சுலபமாக பின்னே தள்ளி விட்டான்.
கீழே விழாமல் இருக்க பேலன்ஸிற்காக காற்றில் இருந்த கையை அசைத்த சவீதாவின் கையில் அவன் முகம் பட்டது. சவீதா கீழே விழாமல் இருக்க அந்த முகத்தை முழு பலத்துடன் பிடித்துக் கொண்டாள். அதில் அவன் அணிந்திருந்த முகமூடி சவீதாவின் கையோடு