(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

பக்கத்து வீட்டில் இருந்து வரும் சத்தமா? சக்தி உற்றுக் கேட்டாள். தெளிவாக கண்டுப்பிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று பார்த்தவளின் கண்ணில், மேலே சுவரில் இருந்த ஜாலி துளைகள் பட்டது. பழைய சிமன்ட் ஜாலி வைத்து விட்டு அதன் மேலே ஒரே ஒரு வரிசையை தெரிவதுப் போல விட்டு மற்றதை சிமெண்ட்டால் பூசி  மூடி இருந்தார்கள்.

  

அந்த சின்ன துளைகள் வழியே சத்தம் கேட்கிறதா?

  

அந்த ஜாலியின் சிறு ஓட்டைகளின் கீழே மூடி இருந்த கண்ணாடி ஜன்னல் ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து வரும் தண்ணீர் குழாய் இருந்தது.

  

சக்தி யோசிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. வேகமாக அந்த குழாயில் மேலே ஏறினாள். முன்புக் கேட்டதை விட தெளிவாக யாரோ பேசுவது கேட்டது. ஆண் குரல்!!!!

  

ஜன்னலின் மேலே காலை வைத்து எம்பி ஜாலியின் வழியே பார்க்க முயன்றாள்.

  

சவீதா!” சத்யாவின் குரல் அலறியது. சவிதாவின் கையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

  

அவளுக்காக பரிதாபப் படாதே. அவ என் மாஸ்க்கை கழட்டாம இருந்திருந்தா நீங்க உயிரோட போயிருந்திருக்கலாம். இப்போ வேற வழியே இல்லை. மூணு பேரும் சாக தான் போறீங்க!” வீராப்புடன் பேசிக் கொண்டிருந்தார் கொண்டிருந்தான் டாக்டர் பிரசாத். கிரிமினலுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது!!!!

  

அவள் நினைத்தது சரி தான்! சரியாக தான் யூகித்திருக்கிறாள்!!! சக்தியின் போலீஸ் மூளை தன்னை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டது!

  

🌼🌸❀✿🌷

   

த்யா பயந்துப் போயிருந்தாள். இருந்தாலும் எப்படியாவது தப்பி விட வேண்டும் என்றும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.