”என்னம்மா இது உன் வாழ்க்கை இப்படி சிக்கலாயிடுச்சே”
”இதெல்லாம் விதி சார், நான் கஷ்டப்படனும்னு எழுதியிருக்கு கஷ்டப்படறேன், முதல்ல என் அப்பா அம்மா இறந்தப்போ ரொம்பவே கஷ்டப்பட்டேன், அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையை நான் கஷ்டப்பட்டு வாழ்ந்தேன் அடுத்து தாத்தா என் வாழ்க்கையில வந்தப்ப என் அப்பா அம்மா இடத்தை நிரப்ப வந்தவராதான் நினைச்சேன், ஆனா துணையா இருக்கேன்னு சொன்னவரு இப்ப நிரந்தரமா என்னை விட்டுப் போயிட்டாரு, எனக்குன்னு இருக்கறவரு எனக்கு மனைவிங்கற அங்கீகாரத்தை தர மறுக்கறாரு, இனி இந்த வாழ்க்கையை நான் எப்படி வாழறதுன்னு தெரியலை சார்”
”உன் மேல எவ்ளோ நம்பிக்கையிருந்தா ஈஸ்வரன் உன் மேல எல்லாத்தையும் எழுதி வைச்சிருப்பான் பாரு, அவனுக்கு கோவலன் மேல நம்பிக்கையில்லை, அவனை விட்டா கல்லூரியை கெடுத்து குட்டிச்சுவராக்கின மாதிரி எல்லாத்தையும் அழிச்சிடுவான் அதனாலதான் இப்படி உயில் எழுதியிருக்கான் போல“
”சொத்து அழிஞ்சா திரும்பவும் சம்பாதிச்சிக்கலாம் ஆனா வாழ்க்கை அழிஞ்சா என்ன செய்தாலும் சரியாக்க முடியாதே சார்”
”எனக்கு உன்னோட கவலை புரியுதும்மா கோவலன் உன் வாழ்க்கையையும் சரி மாதவி வாழ்க்கையையும் சரி கெடுக்கறான், உங்களை நிம்மதியா வாழவிடமாட்டேங்கறான் இனி அவன்தான் மாறனும்”
”மாற வேண்டியது அவர் இல்லை விலக வேண்டியது நான்தான் சார்”
”என்னம்மா சொல்ற”
”அவர் மனசுல மாதவியிருக்கா அதனால அவர்கூடவே அவளை சேர்த்து வைக்கறதா முடிவு பண்ணிட்டேன்“
”என்ன பேச்சு இது தப்பும்மா இதுக்காகவா என் நண்பன் உசுரை விட்டான்”