”அப்படியில்லை சார் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துதான் ஆகனும், அது நானாவே இருந்துட்டுப் போறேன் அதைவிட்டுட்டு பிடிவாதமா இருந்தா 3 பேரு வாழ்க்கையும் கேள்விகுறியாயிடும், அதை விட யாராவது ஒருத்தர் வாழ்க்கை நல்லபடியா அமையட்டுமே”
”நீ ஒண்ணும் தியாகியாயிடாத, காவியத்தில வர்ற கண்ணகி போல புருஷனை விட்டுக்கொடுக்காம இருக்கப் பாரு”
”காவியத்தில கண்ணகியோட கணவன் முதல்ல கண்ணகியை விரும்பி கல்யாணம் செய்துக்கிட்டாரு ஆனா இங்க என் மேல அவருக்கு விருப்பம் இல்லையே சார் விருப்பங்கள் தானா வரனும்”
”கண்டிப்பா வரும்மா அவசரப்படாத நீ விட்டுக்கொடுத்தா மட்டும் மாதவி கோவலனோட சந்தோஷமா வாழ்வாள்ன்னு நினைக்கறியா”
”இப்ப என்னதான் சொல்ல வர்றிங்க”
”எல்லாரும் உட்கார்ந்து பேசலாம்” என சொல்ல அவளும் சரியென்றாள்.
ஹாலில் கண்ணகியும் உதயமூர்த்தியும் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் கோவலன் மாதவியுடன் வந்தான். கண்ணகியைப் பார்த்து
”தாத்தா இல்லாத இந்த வீட்ல என்னால இருக்க முடியாது அதனால நான் மாதவியோட போறேன்” என சொல்ல கண்ணகி அதிர்ந்தாள். மாதவியோ அழுதபடி நின்றாள். உதயமூர்த்தியோ
”மனுஷனாடா நீ கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் இழைக்க எப்படி உனக்கு மனசு வந்தது”
“எனக்கு இவள்கூட வாழ பிடிக்கலை”