”என்ன”
”மாதவியை சந்தோஷமா பார்த்துக்கனும் அவள் கண்கள் என்னிக்குமே கலங்க கூடாது ஒரு நாளும் குற்ற உணர்ச்சியோட அவள் வாழகூடாது” என சொல்ல அவனோ ஒரு நொடி நிதானித்து பின் சரியென தலையாட்டினான்.
மாதவியோ
”அவசரப்படாத கண்ணகி”
”இது அவசரம் இல்லை அவசியம்”
”ஆனா கண்ணகி“
”எல்லாம் பேசி முடிச்சிட்டோம் நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத மாதவி, எனக்கும் கோவலனுக்கும் விவாகரத்து ஆனாலும் சரி நம்ம நட்பு பிரியாது, நாம என்னிக்குமே தோழிகள்தான்” என சொல்ல அதில் மாதவி ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டாள்.
மறுநாள் வக்கீல் வந்தார். அவரிடம் விவாகரத்து பற்றி பேச அவரோ
”ஒரு வருஷம் ஆனாதான் விவாகரத்து தருவாங்க உங்களுக்கு கல்யாணம் ஆகி சில நாள்தான் ஆகுது கண்டிப்பா விவாகரத்து கிடைக்காது” என சொல்ல கண்ணகி கோவலனைப் பார்த்தாள்
”இனி நீங்கதான் ஒரு முடிவு எடுக்கனும்” என சொல்ல மாதவி உள் நுழைந்தாள்
”ஒரு வருஷம்தானே பரவாயில்லை, கோவலன் கண்ணகியோட இருக்கட்டும் விவாகரத்து கிடைச்சதும் என்கிட்ட வரட்டும், அதுவரைக்கும் நான் வேற ஊருக்கு போறேன்” என சொல்ல கோவலன் தடுத்தான்
”என்னை விட்டுப் போகாத”