”மாதவி” என அலற
”இதுதான் என் முடிவு, இதுல எந்த மாற்றமும் இல்லை நான் வரேன் கோவலன்” என சொல்லிவிட்டு மாதவி அங்கிருந்து சென்றேவிட்டாள்.
அந்த பெரிய வீட்டில் மாதவியை இழந்த துக்கத்தில் கோவலனும், வாழ்க்கையை தொலைத்துவிட்ட கவலையில் கண்ணகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவர்களுக்கு நடுவில் எந்த ஒரு உறவும் இல்லை, உணர்ச்சியும் இல்லை, சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பின் தங்கள் அறைகளுக்கு பிரிந்துச் சென்றார்கள்.
மாதவியின் செயல் கண்ணகியால் நம்ப இயலவில்லை வியந்தாள் ஆனாலும் அவளின் புத்திசாலித்தனத்தை கண்டு மெச்சினாள். எப்படியாவது இந்த ஒரு வருடத்திற்குள் கோவலன் தன்னை விரும்புவான் என நினைத்து சென்றுவிட்டாள் அது பொய்யாகப்போவது உறுதி அதை அவள் ஒரு வருடம் கழித்து தெரிந்துக் கொள்வாள் அதுவரை இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் என நினைத்து நொந்துப் போனாள்.
கோவலனும் தன் காதலுக்கு வந்த சோதனையை எதிர்கொள்ள தயாரானான், எப்படியாவது தன் காதல் உண்மையென நிரூபித்து மாதவியின் கரம் பிடிக்க வேண்டும் என முடிவு எடுத்தான், கண்ணகியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தால் நிச்சயம் ஒரு நாள் கண்ணகி மீது இரக்கம் எழுந்தோ அல்லது மனைவி என்ற உரிமையிலோ தவறு செய்துவிடுவோம் என நினைத்து சட்டென ஒரு முடிவு எடுத்தான், அதன்படி கண்ணகியிடம் வந்து தன் மன கருத்தை வெளியிட்டான் அதைக்கேட்டு அதிர்ந்தாள் கண்ணகி
”நான் வீட்டை விட்டு போறேன் எனக்குன்னு ஒரு பங்களா இருக்கு அதுல நான் தங்கி கம்பெனியை பார்த்துக்கிறேன், நீ இங்கயே இருந்து கல்லூரியை பார்த்துக்க” என சொல்ல அவளோ தடுக்கவில்லை
”உங்க விருப்பம் என் பாக்கியம்” என்றாள் அதைக்கேட்டு கோவலன் குழம்பினாலும் சரி அவளே தடுக்கவில்லை என்ற காரணத்தால் அன்றே அவன் அந்த வீட்டை விட்டு வெளியேறி