(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 03 - சசிரேகா

   

றுபக்கம் நாச்சியா மீது வீண்பழி சுமத்த செய்யப்பட்ட திட்டம் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் டீகடையில் ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருந்தனர், அந்நேரம் அகத்தியனை தேடி வந்த ஆட்கள் அவர்களிடம் அகத்தியனை பற்றி விசாரிக்க அவர்களோ தெரியாது என சொல்லவும் அவர்கள் வேறு பக்கம் தேடி ஓடினார்கள். அந்த விசயத்தை வைத்து டீக்கடையில் புது சதித்திட்டம் உருவானது

  

”அப்படின்னா நாச்சியா வீட்ல நான் பார்த்தது சின்னய்யா அகத்தியனை தானா, நான்கூட யாரோ எவனோன்னு நினைச்சேன், ஆமா அவருக்கு அவள் வீட்ல என்னய்யா வேலை”

  

”நாச்சியாவோட அழகுல மயங்கியிருப்பாரு போல”

  

”அட நீ ஒண்ணு வெளிநாட்டுல பார்க்காத அழகிகளா என்ன”

  

”இருந்தாலும் நாச்சியா போல வருமா”

  

”அதுக்குன்னு கீழவீதி பொண்ணுகூடவா உறவாடுவாரு”

  

”அட இதுல போய் என்ன இருக்கு, பெரிய வீட்டுல இதெல்லாம் சகஜம், அந்தக் காலத்தில அவனோட அப்பா செய்யாத கூத்தா என்ன அப்பனை போல பிள்ளை தப்பாம பிறந்திருக்கு”

  

”இதுக்குதான் கார்மெண்ட்ஸ்ல பாதிக்கு பாதி கீழவீதி பொண்ணுங்களை வேலைக்கு வைச்சாப்லயா நான் கூட அந்தாளை நல்லவிதமா நினைச்சேனே ஆனா இப்படியிருக்கானே சே”

  

”அட விடுப்பா விடு அவங்க காலம் காலமா அப்படித்தானே, முதல்ல பாட்டன் அப்புறம் பெரிய ஐயா, அடுத்து அவர் புள்ள இப்ப சின்னய்யா அவங்க ஆளத்தானே கீழவீதி ஆளுங்களை கடவுள் படைச்சான், ஆண்டுகிட்டு போகட்டும் விடுமய்யா”

  

”எனக்கு வயிறு எரியுது“

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.