(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

44. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

காஞ்சனாவின் முகத்தில் இப்போது ஆச்சர்யம் வந்துப் போனது...! இந்துவின் 'இன்ஸ்டன்ட் ரியாக்ஷனை' அவள் எதிர்பார்த்திருக்கவில்லை! ஆனாலும் வயதின் அனுபவத்தின் துணையோடு சீக்கிரமே சமாளித்துக் கொண்டு பேசினாள்!

  

"தேங்க்ஸ் இந்து... எனக்கு தெரியும், சஞ்சீவ் புரிஞ்சுக்குறானோ இல்லையோ, நீ புரிஞ்சுப்பன்னு... நான் இங்கே உன் கிட்ட பேசினதை அவன் கிட்ட நீ சொல்ல கூடாதுன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்... அது உன் இஷ்டம்..."

  

காஞ்சனா பேச எடுத்துக் கொண்டிருந்த எக்ஸ்ட்ரா சில வினாடிகள் இந்துவிற்கும் தேவையான 'ப்ரேக்' கொடுத்திருந்தது!

  

"அது தான் நான் சஞ்சீவை இனி மேல் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டேனே... அதுக்கு மேல, நான் ஏன் அவரோட அம்மாவை பத்தி எல்லாம் அவர் கிட்ட சொல்ல போறேன்... நீங்க இந்த மாதிரி எல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை... " என்றாள் இந்து எங்கேயோ பார்த்துக் கொண்டு!

  

காஞ்சனா மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு இந்துவை பார்த்தாள்!

  

அந்த பார்வையை உணர்ந்து இந்துவும் அவள் பக்கம் பார்த்தாள்!

  

காஞ்சனா மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள்!

   

"தேங்க்ஸ் இந்து... நான் நினைச்ச மாதிரியே தான் நீ இருக்க... தயவு செஞ்சு என்னை தப்பா நினைக்காதே... எனக்கு உன் மேல தனியா எந்த கோபமும் இல்லை... இப்படி எல்லாம் நடக்கும்னு நானே கூட எதிர்பார்க்கலை! ஒரு அம்மாவோட மனசு உனக்கு தான் புரியும்னு நினைச்சேன்... குழந்தைகளை வளர்க்குறது எப்படின்னு நான் அர்ச்சனா கிட்ட ட்யூஷன் எடுத்திருக்கனும் போலருக்கு... அவங்க கொடுத்து வச்சவங்க... சரி நான் கிளம்புறேன்... நீயும் என்னோட வரீயா?"

  

"இல்லை... நீங்க கிளம்புங்க... நான் கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்..."

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.