மத்தபடி எங்களுக்கு எதுவும் தெரியாது, உங்க மருமகன் யார்னே எங்களுக்கு தெரியாது எங்களை விட்டுடுங்க” என காலை பிடித்து கெஞ்சுவது போல நாடகமாட அதை அனைவரும் நம்பினார்கள்.
சங்கமேஸ்வரனோ
”மாப்பிள்ளை அவங்களை விடுங்க, இவ்ளோ அடிச்சும் அவங்க கெஞ்சறதை பார்த்தா உண்மையில அவங்களுக்கு அகத்தியனை பத்தி தெரியலை போல அவங்க போகட்டும் விடுங்க” என சொல்ல அங்கமுத்து நிம்மதியாகி உடனே அவர்களை விரட்டிவிட பொன்முடிக்கு தலையே சுற்றியது
”இந்த அகத்தியன் எங்கதான் போனான், என்ன ஆனான் ஒண்ணுமே தெரியலையே, அந்த பழைய டிரைவர் கூட ஊருக்குள்ள இல்லை, இனி எங்க போய் நான் தேடறது தெரியலையே” என புலம்ப சங்கமேஸ்வரனோ
”கவலைப்படாத உன் புள்ளைக்கு ஏதும் ஆகாது, நான் இருக்கேன் கலங்காத மேலவீதியாளுங்க எல்லாரையும் எழுப்பு தேடட்டும்“
”அகத்தியன் இல்லாத விசயம் ஊருக்குள்ள பரவினா பெரிய பிரச்சனையாயிடும்பா”
”ஆகட்டும் எவனோ ஒருத்தன் காரை உடைச்சி அகத்தியனை கடத்தியிருக்கான், அவனை சும்மா விடக்கூடாது“
“போலீஸை கூப்பிடலாமே“
”போலீஸ் வேண்டாம் நம்ம கௌரவம் என்னாகிறது, நான் சொன்னதை செய் போ மேலவீதியாளுங்களை எழுப்பி அகத்தியனை தேடச் சொல்லு போ” என விரட்ட பொன்முடியும் காரை ஓட்டிக் கொண்டு சென்றார்.
மேலவீதி பக்கம் சென்ற போது போட்டோ ஸ்டூடியோவில் மட்டும் விளக்கொளி எரிவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார் அது என்னவென விசாரிக்க உள்ளே சென்றார் அங்கிருந்தவன்