கூட்டத்திற்குள் நுழைந்து ஆண்களின் பிடியில் சிக்கி தவித்த நாச்சியாவை ஒரு நொடியில் பிடித்து இழுத்து தன்னுடன் நிறுத்திக் கொண்டு ஊரையே எதிர்த்து நின்றான்.
அவனது செயலைக் கண்டு ஊர்மக்கள் ஆச்சர்யப்பட சங்கமேஸ்வரனும் அந்த அதிர்வில் தன்னை உஷார் படுத்திக் கொண்டு நிலையாக நின்றார். பொன்முடியோ அவசர அவசரமாக ஓடிவந்து அகத்தியனை பார்க்க அவனோ நாச்சியாவை தன் கைபிடிக்குள் வைத்திருந்தான் அதைக் கண்டு கதிகலங்கினார்.
”சின்னய்யா அவளை விடுங்க, அவளுக்கு தண்டனை தரனும் அவளை ஊருக்கு நேர்ந்துவிட்டாச்சி, இனி அவளை பார்க்க நீங்க வரக்கூடாது கிளம்புங்க இங்கிருந்து” என சொல்லிக் கொண்டு வந்தவனை அடித்தான் அகத்தியன் அதில் அனைவருமே விலகி நின்றார்கள்
”என்ன நடந்ததுன்னு தெரியாம நீங்களா ஒரு கட்டுக்கதையை உருவாக்காதீங்க” என கத்த அதே நேரம் கார்கோடகன் வந்திறங்கினான், அவன் கையில் இரு போட்டோக்கள் இருந்தது, அவ்விரண்டையும் பொன்முடி அறியவில்லை எப்படியோ அந்த போட்டோக்கள் கார்கோடகனிடம் சிக்கியது அதை ஊர் முன்னிலையில் காட்டி
”பாருங்க நல்லா பாருங்க” என சொல்ல அகத்தியன் அதிர்ந்தான்.
”கார்கோடகா” என உரும அவனோ
”இதுக்குதான் கீழவீதியாளுங்களை வேலைக்கு வைச்சீங்களோ” என நக்கலாக பேச அகத்தியன் புரிந்துக் கொண்டான், ஏதோ ஒன்றை மனதில் வைத்து சமயம் பார்த்து வஞ்சம் தீர்த்துக் கொண்டானே படுபாவி, இதில் பாவம் நாச்சியாவை சிக்க வைத்துவிட்டானே என நினைத்து கோபத்தில் கொந்தளித்தான்.
என்ன ஆனாலும் நாச்சியாவை விட்டுக் கொடுக்க மனதில்லாமல் அகத்தியனையே எதிர்த்து நின்றார்கள் ஆண்கள். அகத்தியனோ சங்கமேஸ்வரனை உதவிக்கு அழைத்தான்