ஆர்த்தியும் இப்போது புன்னகை புரிந்தாள்!
அருகில் வந்த சர்வரிடம் தங்களுக்கு வேண்டியதை சொல்லி ஆர்டர் செய்து விட்டு, இருவரும் பேச்சை தொடர்ந்தனர்...
“உனக்கு என்ன பிடிக்கும்ன்னு சொல்லு ஆர்த்தி?”
“எனக்கு பிடிச்சது எல்லாம் அப்புறம் சொல்றேன் அதற்கு முன்னாடி என்னை பத்தி சொல்லவா?”
“ம்ம்ம்... சொல்லு!”
“நான் ரொம்ப பொசஸிவ்...”
“ம்ம்ம்...”
“எனக்கு ரொம்ப கோபம் வரும்...”
“ஓகே...”
“இதை ஏன் முதலேயே சொல்றேன்னா, என்னுடைய நெகட்டிவ்ஸ் எல்லாம் உனக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கனும், அதுக்காக தான்...”
ஆர்த்தியின் இந்த நேரடி பேச்சு விக்கிராந்திற்கு பிடித்திருந்தது...
“சரி தெரிஞ்சுக்கிறேன்! மேலே சொல்லுங்க... சாரி சொல்லு...”
“ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட்ன்னு எனக்கு யாரும் இல்லை விக்கிராந்த்... அப்பா தான் என்னுடைய பெஸ்ட் ஃப்ரென்ட்...”