ஒரே குழப்பமா இருக்கு”
”என்னங்க ஜானகி வந்ததால சின்ன மருமகள் இங்கிருந்து போயிடுவாளா” என மங்களம் அதிர்ச்சியாக கணவரிடம் கேட்க அதற்கு அவரோ
”போகதானே செய்வ”
”இல்லைங்க அவள் மட்டும் போனா நான் உசுரோடவே இருக்க மாட்டேன்“
”நீ ஒருத்தி இங்க என்ன நடக்குது, நீ பாட்டுக்கு என்னத்த உளறி வைக்கற, எல்லாம் நம்ம கையிலயா இருக்கு”
”பின்ன யார் கையில இருக்கு சொல்லுங்க போய் அவங்ககிட்ட கெஞ்சிப் பார்க்கிறேன்”
”ஓ அப்படியா சரி போ நேரா உன் புள்ளைக்கிட்ட போய் பிச்சையெடு, அவன் மனசு வைச்சா மட்டும்தான் சின்ன மருமகள் இந்த வீட்ல இருப்பா”
”அவனா ஆனா”
”முடியாதுல்ல அப்புறம் என்ன, நானே பலகோணத்தில சிந்திச்சி பார்த்துட்டேன், எல்லா வழியும் மூடிடுச்சி எந்த வழியும் கிடைக்கலை மங்களம் வர்ற கோபத்துக்கு என் புள்ளையை அடி அடின்னு அடிக்கனும்னு தோணுதுடி” என சொல்லி முடிக்கவும் மங்களத்தின் மனதில் புயல் அடித்தது.
தலைமுடியை வாரி கொண்டையிட்டுக் கொண்டு முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு ஏதோ யுத்தத்துக்கு செல்வது போல தயாராக அதைக்கண்ட வீரசிங்கம்
”என்ன செய்ற மங்களம்”
”இன்னிக்கு நானா இல்லை என் புள்ளையான்னு ஒரு கை பார்க்கிறேன்ங்க” என தன் கையை மடக்கி காட்டியபடியே வீராவேசமாக வெளியேறி செல்ல அவரோ நொந்துப் போனார்