“அப்பா அப்படி சொல்லாதீங்க என்னிக்கு ஜானகி தன் கழுத்தில இருந்த தாலியை கழட்டினாளோ அப்பவே அவங்களுக்குள்ள இருந்த உறவு முறிஞ்சிடுச்சிப்பா“
”வெறும் மஞ்சள் கயிறு கழட்டினதால உறவு முறிஞ்சிடுச்சின்னு நீ நினைச்சா அது உன்னோட முட்டாள்தனம், அவளைப் பார்த்தியா செய்றதெல்லாம் செய்துட்டு கடைசி நேரத்தி டக்குன்னு புருஷன்கிட்ட வந்துட்டா பாரு, அவ்ளோதான்மா, இப்ப என்ன தாலியில்லைங்கறியா ஒண்ணு என்ன 10 தாலி கட்டகூட வேங்கையன் தயாரா இருப்பான், இப்ப பிரச்சனை ஜானகியில்லை, வேங்கையன்தான் ஆனா அவன்கூட உன்னை கடைசிவரைக்கும் ஏத்துக்கலை
இனிமேலயும் அவனை நம்பி நீ ஏமாந்துடாத, கிளம்பு வீட்டுக்குப் போகலாம், இங்க இருந்தா நம்ம மானம் மரியாதைதான் காத்துல பறக்கும், நாலு பேரு நாலு விதமா பேசி உனக்கு கெட்டபெயர் வந்துடப்போகுது, கிளம்பும்மா” என மகேந்திரன் சொல்ல அவரின் பேச்சில் இருந்த உண்மை அவளை கட்டுப்படுத்தியது, சரியென்பது போல் தலையாட்டினாள்.
மறுபக்கம் வேங்கையன் அறையில் முதல் முறையாக வந்திறங்கினாள் ஜானகி, அவள் அவளுக்கென இதுநாள் இருந்த தனி அறையில் தங்குவாள் என நினைத்த வேங்கையனுக்கு ஏமாற்றம்.
”ஓ இதுதான் உங்க ரூமா” என கேட்க அவனிடம் பதில் இல்லை
உரிமையுடன் அந்த அறையை சுற்றி வந்து அங்கிருந்த பொருட்களை தொட்டுப் பார்த்து விட்டு நேராக அவனிடம் வர அவனோ இழவு வீட்டில் இருப்பது போல சோகமாக இருந்தான், அவன் மனதில் மஹதியின் நினைவே ஓடியது, ஜானகி வந்ததும் மஹதி பார்த்த பார்வை சே என தன்னையே நொந்துக் கொண்டான், அவனது சோகத்தைக்கண்ட ஜானகியோ
”மாமா” என அழைக்க அவன் அசையவில்லை அதற்காக அவனது தோளில் கையை வைத்து தட்ட அவனோ சட்டென இயல்புக்கு வந்து ஜானகி அருகில் இருப்பதைக்கண்டு அவளின் கையை உதறிவிட்டு விலகி நின்றான். அவனது அந்த செயல் ஜானகிக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது