சொன்னா உடனே அவன்கிட்ட போயிடுவா, இவளை நம்பாத, இவள் உன்னை ஏமாத்திடுவா” என சொல்ல ஜானகிக்கு கோபம் வந்தது
”அத்தை வார்த்தையை அளந்துப் பேசுங்க, நான் ஒண்ணும் அப்படி ஏமாத்திட மாட்டேன், மூர்த்திகிட்ட போக மாட்டேன் இனி இதுதான் என் வீடு, நான் என் புருஷன்கூடதான் இருப்பேன்”
”அடச்சீ நிறுத்துடி வந்துட்டா இத்தனை நாள் இல்லாம இப்ப வந்து புருஷன் புருஷன்னு உரிமை பாராட்டறா, ஏய் நீ செய்றது உனக்கே அசிங்கமா தெரியலை, அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையற நேரமா பார்த்து கெடுத்துட்டு வந்து நிக்கறியே, நீயெல்லாம் என்ன ஜென்மம்”
”அத்தை நான் செஞ்சது தப்புதான், கண்மூடித்தனமா நான் மூர்த்தியை நம்பினேன் ஆனா என் நம்பிக்கை பொய்யுன்னு தெரிஞ்சது, அடுத்து நான் என்ன செய்றது, என்னையே நம்பியிருக்கறவர்கிட்ட வந்தது என் தப்பா, நான் ஒண்ணும் யார் வீட்லயோ தங்கலையே என் புருஷன்கூடதானே இருக்கேன்”
”உன் கழுத்தில என் மகன் கட்டின தாலியில்லையே, இப்ப எந்த உரிமையில உறவுல புருஷன் புருஷன்னு வாய்க்கு வாய் சொல்ற“
”தாலிதானே அதுக்கென்ன இன்னொரு தாலி செய்ய வைச்சி அவர்கிட்ட கொடுத்தா அவர் எனக்கு கட்டுவாரு”
”ஓ அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு, இதப்பாருடி என் மகனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், உன்னால அவன் ரொம்ப ரணமாயிட்டான் வலியில வேதனையில ரொம்ப கஷ்டப்பட்டுட்டான், திரும்பவும் உன்னால அவன் கஷ்டபடமாட்டான், நிச்சயம் உனக்கு அவன் தாலி கட்டமாட்டான்”
“எதை வைச்சி இவ்ளோ உறுதியா சொல்றீங்க”
”அவன் என் புள்ளைடி எனக்கு அவனைப் பத்தி தெரியாதா”