“வாழப்போறவரே என்னை ஏத்துக்கிட்ட பின்னாடி உங்களுக்கென்ன பிரச்சனை” என கத்த வேங்கையன் பொறுமையிழந்து
”போதும் நிப்பாட்டு யார் முன்னாடி பேசறன்னு தெரியுதா, என் அம்மா அவங்க, வார்த்தையை அளந்து கொட்டு” என சத்தம் போட அவளோ
”பாருங்க மாமா உங்கம்மா என்ன பேசறாங்கன்னு, நான் மனம் திருந்தி உங்களோட வாழ வந்தது தப்பா மாமா” என கேட்க அவனிடம் அதற்கு பதில் இல்லை மங்களமோ
”ஆமாம் தப்புதான்”
”இது எப்படி தப்பாகும்”
”ரெண்டு பேரும் பிரிஞ்சிக்கிட்ட பின்னாடி இப்ப ஒண்ணு சேர்றது தப்பு”
”ஏன் பிரிஞ்சவங்க ஒண்ணு சேரக்கூடாதா”
”சேரலாம் ஆனா எந்த முறையில உன்னை நான் சேர்த்துக்கறது”
”இப்ப என்ன தாலி கட்டிட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுல்ல இருங்க இப்பவே வரேன்” என சொல்லிவிட்டு எங்கோ சென்றாள்
சில நிமிடங்கள் கழித்து ஒரு மஞ்சளை கயிறில் கட்டி கொண்டு வந்து அதை அனைவரிடமும் காட்டி
”இதுதான் தாலி இப்ப பாருங்க உங்க புள்ளை இதை என் கழுத்துல கட்டுவாரு” என சொல்லி அந்த தாலியை வேங்கையன் பக்கம் நீட்டி
”இந்தாங்க மாமா தாலியை பிடிங்க, என் கழுத்தில கட்டுங்க” என அதிகாரமாகச் சொல்ல