இது சக்தியின் ஃபேவரைட் டொமேயின் என்பதால் எந்த அலுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டாள் சக்தி.
🌼🌸❀✿🌷
அடிப்பட்ட இடங்களில் கட்டுகளோடு ஹாஸ்பிட்டல் பெட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்த சக்தி, சத்யாவிடம் தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துக் கொண்டிருந்தாள்.
“காலையில SD அவன் ரூம்ல டாக்டர் பிரசாத் கொடுத்தார்னு சொல்லி பீத்திக்கிட்ட டிவைசஸ் பார்த்த உடனே எனக்கு வித்தியாசம் தெரிஞ்சது. எல்லாமே சீப் மெட்டிரியல். ரஸ்ட் ஆகி மேலே பெயின்ட் செய்த பழைய மெடீரியல்ஸ். அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்! எக்ஸ்பான்ட் வேற செய்றார். பணக்காரங்க வராங்கன்னு எல்லாம் சொல்ற இடத்துல ஏன் இப்படின்னு கேள்வி வந்துச்சு. எங்கேயோ எதுவோ சரி இல்லைன்னு புரிஞ்சது. அதை பத்தி டீடெயில்ஸ் தெரிஞ்சுக்க ஹெல்த் டிபார்ட்மென்ட்ல வேலை செய்ற என்னோட ஐபிஎஸ் கொலீக்கோட ரிலேட்டிவ் பார்க்க போனேன். எதிர்பார்த்ததுப் போலவே அந்த ஹாஸ்பிட்டல் மேல அரசல் புரசலா சில கம்ப்ளெயின்ட் இருக்கு. முக்கியமா மெடிகல் ட்ரக் அப்யூஸ் பத்தின கம்ப்ளெயின்ட். போதை மருந்து மாதிரியே மாத்திரைங்களுக்கு அடிமை ஆனவங்க நிறையப் பேர் இருக்காங்க. பணம் இருக்க அந்த மாதிரி அடிமைங்களை டாக்டர் பிரசாத் ஸ்பெஷலா கவனிச்சிருக்கார். இதுவரைக்கும் ஸ்ட்ராங்கான கம்ப்ளெயின்ட், எவிடன்ஸ் எதுவும் இல்லை. கம்ப்ளெயின்ட் வந்தாலும் அவர் பணத்தை கொடுத்து அதை மூடி மறைச்சிடுவார். ரீசன்ட்டா கூட ஒரு யங் டாக்டர் இதைப் பத்தி கம்ப்ளெயின்ட் சொல்லி இருக்கார். டாக்டர் பிரசாத் கொடுத்த பணத்தை வாங்கிட்டு ஆஃபிஷியல்ஸ் அந்த டாக்டர் செய்த தப்பை பிரசாத் கேள்வி கேட்டதால பொய்யா கம்ப்ளெயின்ட் கொடுத்ததா அந்த கம்ப்லேயின்ட்டை க்ளோஸ் செய்துட்டாங்க.”
“அப்படி எல்லாம் நிஜமாவே செய்ய முடியுமா சக்தி?” சத்யாவால் நம்ப தான் முடியவில்லை!
“பணம், லிங்க் இருந்தா செய்யலாம் சத்யா!”