(Reading time: 9 - 18 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இதை எல்லாம் நீ அந்த ஒரே ரூமை பார்த்ததிலேயே கண்டுப்பிடிச்சுட்டீயா? எனக்கு எதுவும் தோணவே இல்லையே!!!”

  

நீ தான் சீரியஸா தேன் சாரை பார்த்து ரசிச்சுட்டு இருந்தீயே! நீயும் SD'யும் ஒரே மாதிரி. எப்போ என்ன செய்றதுன்னு இல்லை!”

  

அப்போ போலி டாக்டர்க்கு உன் மேல லவ்ன்னு உனக்கும் தெரியும்னு சொல்லு!”

  

அதெல்லாம் இல்லை! நாம கேஸ்க்கு வருவோம். ஆரம்பத்துல இருந்தே என்னவோ அந்த ஹாஸ்பிட்டல்ல மர்மம் இருக்குறதா ஒரு ஃபீல் இருந்துட்டே இருந்துச்சு. அந்த சந்தேகப் புத்தி தான் என்னை இவ்வளவு தோண்ட வச்சதுன்னு வச்சுக்கோயேன்.”

  

இருந்தாலும் அஹல்யா மேல டாக்டர்க்கு என்ன கோபம்? அவர் மேல கம்ப்ளெயின்ட் கொடுத்தவங்க அஹல்யாக்கு தெரிஞ்சவங்களா?”

  

அது அப்படி இல்லை சத்யா. SD டாக்டர் பிரசாத் எப்படி ஹாஸ்பிட்டலை எக்ஸ்பான்ட் செய்தாரு செய்தாருன்னு சொன்னான் பார்த்தீயா. அது தான் இங்கே பாயின்ட். எனக்கு முதல்ல இருந்தே, எதுக்கு அமைதியா போயிட்ட இந்த கேஸை வேலை மெனக்கெட்டு மொட்டைக் கடிதம் எல்லாம் அனுப்பி திரும்ப நோன்டனும்னு ஒரு கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. ஒருவேளை சேகரன் மேல யாருக்கோ இருக்க அன்பு, அக்கறையினால இருக்கும்னு யோசிச்சுட்டே இருந்தேன். அந்த அளவுக்கு சேகரன் மேல அக்கறை வச்சவங்க யாரும் இருக்க மாதிரி தெரியலை. அப்புறம் SD கிட்ட பேசும் போது அவன் பேச்சு வாக்குல eliminationன்னு மென்ஷன் செய்தான் அப்போ தான் பொறி தட்டிச்சு. இது சேகரன் சாவுக்காக இல்லை. அஹல்யாவை eliminate செய்ய நடக்குற திட்டம். அங்கே இருந்து ஏன் எதுக்குன்னு யோசிச்சப்போ புரிஞ்சிருச்சு."

  

"என்ன??"

   

"மும்பைல இருக்க அபிராமியோ அவங்க குடும்பமோ இங்கே திரும்பி வர ஐடியால இல்லவே இல்லை. நாப்பது வருஷத்துக்கும் மேல அந்த சொத்து எல்லாம் பிரசாத் கட்டுப்பாடுல

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.