கேட்பாரில்லாம இருந்துச்சு. ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருந்த இடத்தை எல்லாம் ஃபோர்ஜரி செஞ்சு ஏமாத்தி எடுத்து ஹாஸ்பிட்டலை பெருசாக்கிட்டார். திடீர்னு அபிராமி எல்லாத்தையும் ஒரு பொண்ணுக்கு எழுதிட்டேன். அவ அங்கே வரான்னு சொல்லவே டாக்டர்க்கு பெரிய ஷாக். யாரு அந்தப் பொண்ணுன்னு ஒன்னும் தெரியலை!"
"ஓ!!!"
"பிரசாத்தோட அடியாள் சேகரனை அனுப்பி அஹல்யாவை பத்தி தெரிஞ்சுக்க பார்த்திருக்கார். அஹல்யா தனியா இருக்குறதை தெரிஞ்சு சேகரனை அவக் கிட்ட நல்லவனா நடிச்சு நெருங்கி பழக சொல்லி இருக்கார். அஹல்யா ஓரளவுக்கு மேல அதுக்கு இடம் கொடுக்கலை. அதனால சேகரன் அஹல்யா கிட்ட தப்பா நடந்து அவளை தன்னோட கட்டுபாட்டுக்கு கீழே கொண்டு வர முயற்சி செய்திருக்கான். அதுவும் நடக்கலை. அமைதியான அஹல்யா புலியா மாறி அவனை துரத்திட்டா. இதை சவீதா பார்க்கவும் சேகரன் பயந்துட்டான். பிரசாத் அவனை விட பெரிய கிரிமினல் ஆச்சே. அந்த சிச்சுவேஷனை வச்சு புது ப்ளான் போட்ருக்கான். சேகரனை வச்சே அஹல்யாக்கும் அவனுக்கும் தப்பான உறவு இருக்குன்னு எல்லோர் கிட்டேயும் சொல்ல வச்சிருக்கான். எதிர்பார்த்த மாதிரியே அஹல்யா பேரு கெட்டுப் போச்சு.”
🌼🌸❀✿🌷
சக்தி சத்யாவிற்கு விளக்கம் கொடுத்து கொண்டிருந்ததுப் போலவே தென்றல்வாணன் தன் மேலதிகாரியான டிஎஸ்பியிடம் தான் கண்டுப்பிடித்த விபரங்களையும், பிரசாத் சொன்ன விபரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான்.
“...அஹல்யாவா ஊரை விட்டு போயிடுவான்னு பிரசாத் யோசிக்கும் போது சேகரன் டபுள் க்ராஸ் செயதிருக்கான். டாக்டர் எதுக்காக அவனை வச்சு அஹல்யாவை டார்ச்சர் செய்றார்னு கண்டுப்பிடிச்ச உடனே அவன் கோணல் புத்தி வேற மாதிரி வேலை செய்திருக்கு. அஹல்யா இருக்க வீடை அவன் பேருக்கு மாத்தி எழுத வைக்க திட்டம் போட்டிருக்கான். அஹல்யாவை மிரட்ட டாகுமென்ட், போட்டோன்னு பக்காவா ரெடி செய்தவன் அதை பிரசாத் கிட்ட சொன்னது மட்டும் தப்பா செய்திருக்கான். பிரசாத் அதெல்லாம் செய்யாதேன்னு சொல்லி அவனை நிறுத்த முயற்சி செய்திருக்கார். சேகரன் என்னை தடுத்தா உன் வண்டவாளத்தை உடைச்சிடுவேன்னு அவரையே மிரட்டி இருக்கான். அப்போ நடந்த வாக்குவாதம் கைகலப்பா போக டாக்டர்