”மூடற நிலைமைக்கு வந்துடுச்சா அவள் என்னதான் செய்றா”
”யாரை கேட்கற”
”வேற யாரை தாளாளரைதான் கேட்கறேன்”
”கண்ணகி பாவம் மனசு உடைஞ்சிப் போயிட்டா”
”புரியலையே அவள் ரொம்ப தைரியசாலி போன முறை செமஸ்டர் எக்ஸாம்க்காக அவள் எவ்ளோ பாடுபட்டா”
”ஆமாம் அவளை அப்படியே விட்டிருக்கலாம், தேவையில்லாம அவளுக்கு நல்லது செய்யப் போக கடைசியில அவள் வீட்டுக்குள்ளயே முடங்கிப் போயிட்டா”
”ஏன்”
“அந்த சிலம்பு அவளை மிரட்டி வைச்சிருக்கான்”
”மிரட்டலா என்ன சொல்றீங்க”
”உனக்கும் மாதவிக்கும் இடையில இருக்கற உறவைப் பத்தி வெளி உலகத்துல சொல்லிடுவேன்னு மிரட்டிதான் பிரின்சிபால் பதவியை வாங்கினான், அந்த பதவியை வைச்சிக்கிட்டு அட்டூழியம் செய்றான், அவனுக்கு பிடிச்ச மாதிரி கல்லூரியை மாத்திட்டான், யார்கிட்டயும் ஒழுக்கம் இல்லை, கண்ணகி நியமிச்ச எல்லா ஆசிரியர்களையும் வெளியே அனுப்பிட்டு அவனுக்கு சலாம் போடறவங்களை வேலைக்கு வைச்சிருக்கான், பாடமும் எடுக்கறதில்லை, மாணவர்களும் சரிவர கல்லூரிக்கு வர்றதில்லை, மக்கள் மத்தியில நம்ம கல்லூரி மேல கெட்ட பெயர் வந்துடுச்சி, இதை கண்ணகியால தீர்க்க முடியலை, மனசு உடைஞ்சிப் போய் வீட்லயே இருக்கா நான் போய் அவள்கிட்ட பேசினேன், கண்கலங்கி கைவிரிச்சா, இதுக்கு எல்லாம் யார் காரணம் தெரியுமா”