(Reading time: 25 - 49 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

பார்த்துக்கிறேன், அங்க என்னடான்னா சிலம்புவுக்கு பயந்து கண்ணகி வீட்லயே முடங்கிக் கிடந்தா எப்படி, முதல்ல அவளை வெளிய கொண்டு வரனும் சிலம்புவை நான் அடக்கறேன், முதல்ல அவளை போய் பார்க்கலாம்” என முடிவெடுத்து அன்றைய மாலை பொழுதில் கம்பெனியை விட்டு நேராக கண்ணகி வீட்டிற்குச் சென்றான்.

  

அவளோ கோவலனது வீட்டில் தங்காமல் பழையபடி முன்பிருந்த அவளது வாடகை வீட்டில் தங்கியிருந்தாள், கோவலனது கார் அந்த வீட்டின் முன் நின்றது. மாதவியும் அதே வீட்டில்தானே வாழ்ந்தாள் அந்த நினைப்பு வரவும் கோவலன் சற்று மனம் கலங்கியபடியே காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றான்.

  

வீடு திறந்தபடி இருந்தது ஹாலில் அவள் இல்லை உள்ளே அறைக்குள் எட்டிப்பார்த்தான், அங்கும் அவள் இல்லை, அப்படியே அடுத்து கிச்சன் அறைக்குள் செல்ல அங்கு தரையில் மயங்கிய நிலையில் கிடந்தாள் கண்ணகி, அடுப்பில் பால் பொங்கி அடுப்பு அனைந்து அந்த அறை முழுவதும் கேஸ் பரவியிருக்க கோவலனுக்கு திக்கென்றது, சட்டென சிலிண்டர் ஆப் செய்தவன் ஜன்னல்களை திறந்துவிட்டு கண்ணகியை அலேக்காக தூக்கிக் கொண்டு அவளது படுக்கையறைக்கு வந்து அந்த கட்டிலில் படுக்க வைத்தான்

  

”கண்ணகி கண்ணகி” என அவளை உலுக்கினான்

  

பதில் இல்லை அசைவும் இல்லை அவசரமாக தண்ணீர் கொண்டு வந்து அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட அப்போதும் மயக்கம் தெளியாமல் கிடந்தாள் கண்ணகி.

  

அவளை ஏற இறங்கப் பார்த்தான் உடல் மெலிந்து முகம் சுருங்கி யாரோ போல இருந்தாள்

  

கண்ணகியா இவள் என்பது போல அடையாளம் தெரியாதபடி இருக்க அவனோ உடனே அவளை தூக்கிக் கொண்டு தனது காரில் கிடத்திவிட்டு ஆஸ்பிட்டலுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.

  

ஆஸ்பிட்டலில் அவளை அட்மிட் செய்தான், மருத்துவர்கள் வைத்தியம் செய்தார்கள். 2 மணி நேரம் கழித்து மருத்துவர் அவனை தன் அறைக்கு வரவழைத்தார். அங்கு சென்றவன் மருத்துவரிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.