நீங்க இழந்திருப்பீங்க, இப்படியா பார்த்துக்கறது”
”அய்யோ எனக்குத் தெரியாது நான் கம்பெனி விசயமா வெளிய தங்கியிருந்தேன்”
”ப்ச் இப்படி சொன்னா எப்படி, வேலை வேலைன்னு நீங்க போயிட்டா பாவம் அவங்க என்ன செய்வாங்களாம், பசி பட்டினியில செத்தாகூட உங்களுக்கு தெரிஞ்சிருக்காது”
”சாரி டாக்டர்”
”அவங்களுக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கோம் இருந்தாலும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வைங்க”
”வேற ஏதோ கிரிட்டிகல்ன்னு சொன்னீங்களே”
”அவங்களை சாப்பிட வைங்க இல்லைன்னா அவ்ளோதான் ஆஸ்பிட்டல்ல சேர்த்தாலும் பிரயோசனம் இல்லை” என சொல்ல அதிர்ந்தான் கோவலன்
”அவ்ளோ மோசமான நிலைமையிலயா அவள் இருக்கா”
”ஆமாம்“
”சரி நான் அவளை பார்த்துக்கிறேன் எப்போ டிஸ்சார்ஜ் செய்றது”
”அவங்க கண் விழிச்சதும் தாராளமா அவங்களை கூட்டிட்டுப் போங்க, பழங்கள் ஜூஸ்ன்னு சாப்பிட கொடுங்க, அவங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளா கொடுங்க” என சொல்ல அவனும் சரி சரியென தலையாட்டிவிட்டு கண்ணகியை காணச் சென்றான்.
அவள் அப்போதுதான் கண்கள் திறந்து தான் எங்கிருக்கிறோம் என தெரியாமல் மலங்க மலங்க பார்க்க அவளிடம் வந்து நின்றான் கோவலன், அவனைக்கண்டதும் ஆச்சர்யத்தில் எழுந்து அமர போக அவனே தடுத்து அவளை படுக்கையில் படுக்க வைத்தான்