இட்டான்.
தாளாளர் பிரின்சிபால் ஆனாலும் அந்த கெத்து விடாமல் இருந்தான்.
அரை மணி நேரத்தில் ஆடிட்டோரியமே மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பிவிட்டது, கண்ணகியும் கோவலனும் கம்பீரமாக வந்து நின்றார்கள் அவர்களைக்கண்டதும் அனைவரும் மரியாதை அளிக்க கண்ணகியோ
”இந்த கல்லூரியோட புது பிரின்சிபால் இவர்தான், பேரு கோவலன்” என சொல்ல அனைவருமே வியந்தார்கள், பின் கைதட்டினார்கள்
கண்ணகியோ கோவலனிடம்
”இனி நீங்கதான் பேசனும்” என சொல்லிவிட்டு ஒதுங்க அவனோ மாணவர்களிடம் வந்து நின்றான் முன்பு எப்படி கண்ணகி நின்றாளோ பேசினாளோ அதையே செய்தான், அதைக்கேட்டு அவளே வியந்தாள், மாணவர்கள் அவனின் பேச்சைக் கேட்டு தலையாட்டினார்கள்.
”அவ்ளோதான் இனி நீங்க வகுப்புக்குச் செல்லலாம்” என சொல்ல மாணவர்களில் இருந்து ஒருவன் கத்தினான்
”அவ்ளோதானா சார் நீதிமொழி சொல்லப்போறதில்லையா” என கேட்க அவன் அதிர்ந்தான், சட்டென கண்ணகியைப் பார்க்க அவளோ மென்மையாக சிரித்துவிட்டு எழுந்து நின்று மாணவர்களைப் பார்த்து சொன்னாள்.
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்