(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

எதையாவது யோசிச்சு மனசை குழப்பிக்காதே...”

  

ம்ம்ம்...”

  

இப்போ தூங்கலாம், நாளைக்கு யோசிக்கலாம்...”

  

சரி பவி... ரொம்ப தேங்க்ஸ்... அம்மாவோட நீ எங்க வீட்டுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...”

  

நானும் தான் எதிர்ப்பார்க்கலை பாரு...”

  

கேள்வியாக பார்த்த பாரதியிடம் கமலாவிடம் பேசியதை சொன்னாள் பவித்ரா...

  

அத்தையோட கணிப்பு படி இன்னும் இரண்டு மூணு நாள்ல விவேக்கே உன்னை தேடி இங்கே வந்திருவார்...”

  

ப்ச்... அது எல்லாம் உண்மைன்னா ஃபேமிலி கோர்ட்டுல இவ்வளவு கேஸ் வர வேண்டிய அவசியம் இல்லையே...”

  

அது... அது... சரி, அதை எல்லாம் விடு இப்போ தூங்கலாம்...”

  

சொல்லிவிட்டு, அந்த அறையில் இருந்த கட்டிலில் தலையணைகள் மற்றும் போர்வையை சரி செய்த பவித்ரா, அவளையே பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த பாரதியை பார்த்து,

  

தூங்கலாமா?” என்றாள்.

  

நீ... நீ இங்கேயா தூங்கப் போற?”

  

பாரதியின் குரலில் இருந்த ஆச்சர்யத்தையும், தயக்கத்தையும் கவனித்து விட்டு,

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.