ரெஃபரென்ஸ் புக்குகளை புரட்டிக் கொண்டிருந்தாள் பவித்ரா. அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவள்,
“ஹாய் பாரு... குட் மார்னிங்... நல்லா தூங்கிட்டு இருந்த அது தான் டிஸ்டர்ப் செய்யலை...” என்றாள் சின்ன புன்னகையுடன்!
“ம்ம்ம்...”
“இப்போ என்ன?”
“நான் இருக்க நிலைமையில் எனக்கு எப்படி பவி தூக்கம் எல்லாம் வருது?”
“பாரு, மனசுல குழப்பம் இருக்கும் போது தூங்க கூடாதுன்னு ஏதாவது சட்டமா என்ன? இதோ பார், நல்லா தூங்கி எழுந்ததால உன் மனசும் உடம்பும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இப்படி தெளிவா இருக்க மனசோட யோசிச்சுப் பார்... விவேக் எதனால இப்படி செய்றார்ன்னு ஐடியா ஏதாவது கிடைக்கும்...”
தலை அசைத்து விட்டு தோழியின் பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தாள் பாரதி...
“உன் கிட்டப் பேசுறதே எனக்கு ரெஃப்ரெஷிங்கா தான் இருக்கு... நீ செய்ற ஹெல்புக்கு எல்லாம் ரொம்ப தேங்க்ஸ் பவி...”
“ம்ம்ம்...!!!! இப்படி அப்பப்போ தவணை முறையில நன்றி சொல்லிட்டே இருக்குறதுக்கு மொத்தமா ஒரு மூட்டை நன்றியை எனக்கு ஒன்னா கொடுத்துரு... அப்போ, ஒன்னு இரண்டு வருஷத்துக்கு தேங்க்ஸ் சொல்ற வேலை உனக்கு இருக்காது...”
“அப்படி இல்லை பவி, இந்த காலத்தில கூட பிறந்தவங்க கூட இப்படி அன்பா இருக்குறதில்லை... இந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி...”
“உனக்கு இப்போவாவது புரிஞ்சா சரி தான்...”