(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இல்லை பவி, நீயாவது எனக்கு ஃப்ரென்ட்... ஆனால் அண்ணா, அம்மா எல்லாம் என்கிட்டே இப்படி அன்பா நடந்துக்க வேண்டிய அவசியமே இல்லையே...”

  

நீ சொல்றது உண்மை தான் பாரு... நானே இதை நினைச்சு ஆச்சர்யப் பட்டிருக்கேன்... அத்தைக்கு பெண் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை, ஆனால் அவங்க ஆசை நிறைவேறலை... உன்னை பார்த்த நாள்ல இருந்தே அவங்க உன்னை அவங்களோட தத்து புத்திரியா தான் மனசுல நினைச்சிருக்காங்க... அத்தை வார்த்தைக்கு இந்த வீட்டில் மறுபேச்சு ஏது?”

  

அண்ணா உன் கிட்ட ஒன்னும் சொல்லலையா?”

  

எதைப் பத்தி?”

  

நீ நேத்து நைட் என்னோட தூங்குனீயே...”

  

தயக்கத்துடன் கேட்ட தோழியை பார்த்து முறைத்த பவித்ரா, பின் சிரித்தாள்!

  

ஆமாம் மேடம், எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆச்சு... நீ வேற... இது அவரோட அம்மாவுடைய ஆர்டர்... நானே மாத்தி நினைச்சாலும் உங்க அண்ணன் என்னை அத்தை பேச்சை மீற விட மாட்டார்... இது மாதிரி எல்லாம் தேவை இல்லாம யோசிக்குறதை முதல்ல நிறுத்து... டிஃபன் சாப்பிடு... அதுக்கு அப்புறம் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு... ஈவ்னிங் டைம்ல நாம சும்மா வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாம்...”

  

சரி என ஏற்றுக் கொண்டு தோழி சொன்னதை செய்தாள் பாரதி!

  

வித்ரா சொன்னதை போல் பல நாட்களுக்கு பின் கிடைத்த தூக்கம் அவளின் மனதில் புத்துணர்ச்சியை கொடுத்திருந்தது. காலை உணவை முடித்து விட்டு அறைக்கு சென்ற பாரதியின் மனதில் அது வரை சற்றே பின்னே இருந்த கணவனின் நினைவு மீண்டும் மேலோங்கியது... விவேக் இந்நேரம் என்ன செய்துக் கொண்டிருப்பான்? அவளை பற்றிய நினைவாவது அவனுக்கு இருக்குமா? அல்லது தொல்லை விட்டது என்று நிம்மதியாக

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.