(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

கிருத்திகாவிற்கு கண்ணைக் கட்டி புதிய ஒரு கிரகத்தில் விட்டதுப் போல இருந்தது!

   

மீண்டும் தியாகராஜன் பக்கம் பார்வையை செலுத்தினாள்!

   

ன் இப்படி??? என்னை உங்களுக்கு பிடிக்கலையா? எதுக்காக இப்படி விவாகரத்து முடிவுக்கு வந்தீங்க?”

  

தியாகு பதில் சொல்லாமல் (கற்)சிலையைப் போல அசையாமல் அமைதியாக இருந்தான்.

  

ப்ளீஸ் சொல்லுங்க, நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்?” 

  

கிட்டத்தட்ட அழும் குரலில் அவள் கேட்க, அந்த சிலை அசைந்தது!!!

  

திரும்பி அவளைப் பார்த்து,

  

என்...” என எதுவோ சொல்ல ஆரம்பித்தவன், கிருத்திகாவின் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்து பதறிப் போனான்.

  

கீர்த்தி, என்ன நீ அழுற!”

  

அவனின் ரியாக்ஷனில் அவள் திகைத்துப் போய் இருக்க... தியாகு அவசரமாக காரை சாலையின் ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான். பக்கத்தில் இருந்த பேப்பர் டிஷ்யூவை எடுத்து அவளின் கண்களை அவனே துடைத்து விட்டான்.

  

என்ன நீ அழுற?”

  

தியாகராஜனின் முகத்தில் தெரிந்த பதற்றமும், அவளிடம் டிஷ்யூவை எடுத்துக் கொடுக்காமல் அவனாக அவளின் கண்களை துடைத்ததும், கிருத்திகாவிற்கு பிடித்தது. ஓரளவிற்கு மனம் அமைதிப் பெற,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.