(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ஹி ஹி ஹி! ஒண்ணுமில்லை ப்ரின்சஸ்... நீ அண்ணான்னே கூப்பிடு!!!! அந்த கார்ல இருக்க உன்னோட இன்னொரு பாசமலர் உங்க கார் நிக்கவும், கேள்வி மேல கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டார். இனிமேல் சென்னைக்குப் போய் பேசுங்க இல்லன்னா ஃப்ளைட்ல பேசுங்க. காரை இப்படி எல்லாம் நிறுத்தாதீங்க... அவருக்கு என்னால பதில் சொல்லி சமாளிக்க முடியாது! ஓகேவா?”

  

வெற்றி பற்றி அறிந்திருந்ததால், மேலே எதுவும் கேட்காமல், தலையை அசைத்து,

   

ம்ம்... சரி,” என்றாள் கிருத்திகா!

  

அவளின் பார்வை ராஜிடம் மீண்டும் சென்றது! அவன் இப்போது கடமையே கண்ணாக சாலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

  

ஓகே பிரின்சஸ்... ஏர்போர்ட்ல பார்ப்போம்... பை தியாகு...” என சொல்லிவிட்டு விஜய் அவனுடைய கார் பக்கம் சென்றான்.

  

கிருத்திகா மீண்டும் கணவனைப் பார்த்தாள். அவன் திரும்பவும் கற்சிலையாக மாறி இருந்தான்.

  

அடடா!!! மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமா...!!!!!!!!!!!!!!!!

   

கிருத்திகாவிற்கு கடுப்பாக இருந்தது!

  

தியாகராஜன் காரை மீண்டும் சாலையில் செலுத்த தொடங்க, கிருத்திகா யோசனையில் ஆழ்ந்தாள்.

  

என்ன நடந்திருக்கும் அவர்களுக்குள்? ஒரு வேளை அவர்கள் இரண்டுப் பேரின் குடும்பத்தினரால் பிரச்சனை வந்திருக்குமோ?

  

ஆனால், இப்போது அனைவரும் நன்றாக தானே பேசுகிறார்கள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.