“பின்ன வேற என்ன செய்ய சொல்றீங்க?” என கொஞ்சலாக சொன்னாள் அவள்.
தியாகுவின் கண்கள் ‘கம்’ போட்டு ஒட்டிக் கொண்டதை போல இப்போது அவளிடமே இருந்தது.
“என்ன செய்றதா? கீர்த்தி, உனக்கு என்னைப் பத்தி ஏதாவது ஞாபகம் இருக்கா?”
அவனின் குரல் இப்போது மென்மையாக ஒலித்தது. கூடவே அதில் இன்னமும் என்னவோ இருந்தது... அது என்ன என்று கிருத்திகாவிற்கு புரிப்படவில்லை!!!
ஆனால், அந்த குரலில், அவனின் பார்வையில் அவளின் மனம் மயங்கியது... இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, அவனின் கேள்வியைப் பற்றி யோசித்தாள்...
ராஜ் பற்றி அவளுக்கு என்ன ஞாபகம் இருக்கிறது?
ஒரே ஒரு நாள் நிழலாக அவள் மனதில் தோன்றினான்... அவன் முகம் தெரியவில்லை என்றாலும்...
யோசிக்கும் போதே அந்த காட்சியின் நினைவில் அவளுக்கு கன்னம் சூடாகி சிவந்தது.
அவள் யோசிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த தியாகராஜன், அவள் முகத்தில் தோன்றிய வெட்கத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்!
“கீர்த்தி! என்ன கேள்வி கேட்டா வெட்கப் படுற???”
“வெட்கமா... அதெல்லாம் ஒண்ணுமில்லை...”
திக்கி திணறி... முழுக்க நனைந்தப் பிறகு முக்காடு போட முயன்றாள் அவள்.