”ஏன் இந்த திடீர் முடிவு”
”நான் இல்லைன்னாலும் இங்க எதுவும் யாரும் மாறாதுங்கற நம்பிக்கையில எடுத்த முடிவு இது, இனியும் இங்க இருந்தா அது சரியா வராது”
”ஏன் அப்படி சொல்ற இன்னும் 6 மாசம் இருக்கு”
”எதுக்கு விவாகரத்துக்காகவா”
”ஆமாம் அதுவரைக்கும் நீ இங்கயே இரு, டீச்சர் வேலைக்கு போக வேணாம், தாளாளராவே இரு, ஏன் விவாகரத்தே ஆனாலும் பரவாயில்லை நீ இந்த கல்லூரிக்கு தாளாளரா இருக்கலாம்”
”இது எதுக்கு ஓ ஜீவனாம்சம் தர்றீங்களா”
”சே சே அப்படியில்லை உனக்குன்னு எதுவும் வேணாமா”
”வேணாம் எனக்குன்னு இருந்த ஒரே சொத்து நீங்கதான், ஆனா நீங்களே எனக்கு இல்லைங்கறப்ப எனக்கு வேற எதுமேலயும் விருப்பம் வரலை, தாராளமா நீங்க என்னை விவாகரத்து செய்யலாம், எனக்கு ஜீவனாம்சம் கூட தேவையில்லை”
”அவசரப்படாத வாழறதுக்கு பணம் தேவை”
”அது உங்களுக்கு எனக்கு அப்படியில்லை”
”என்ன நீ இப்படி பேசி வைக்கற”
”கல்லூரிக்காகதானே என்னை மறுபடியும் இங்க கூட்டிட்டு வந்தீங்க, அதான் கல்லூரி பழைய மாதிரி மாறிடுச்சே, இனி அங்க எனக்கு எந்த வேலையும் இல்லை அதனால நான் கிளம்பறேன்”