வருவா அவளை நான் நம்பறேன்”
”சந்தோஷம் 6 மாசம் எதுக்கு, இப்பவே நான் பத்திரத்தில எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துடறேன், விவாகரத்து செய்ய வேணாம், நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்க நான் சம்மதிக்கற மாதிரி பத்திரத்தை ரெடி பண்ணி தரேன்”
”அது தப்பு விவாகரத்து முறையா செய்தாதான் இரண்டாவது கல்யாணம் செல்லுபடியாகும் எனக்கு கல்யாணம் ஆன பின்னாடி நீ எப்படி இருப்ப, நீயும் இன்னொரு கல்யாணம் செய்துக்க”
”என்னால உங்களை மறக்க முடியாது, நீங்க எப்படி மாதவியை காதலிச்சீங்களோ அதே போல நானும் உங்களை காதலிக்கிறேன், உங்க காதல் போல என்னோட காதலும் புனிதமானதுதான், மாதவி போல நானும் இப்ப உங்களை விட்டுப் போறேன்”
”கண்ணகி போகாத அவ்ளோதான் சொல்லிட்டேன்”
”இல்லை நான் இங்க இருக்கறது தப்பு, எனக்கு உரிமையில்லாத இடத்தில இருக்க பிடிக்கலை”
”நான் உனக்கு உரிமை தரேன்”
”என்ன உரிமை மனைவிங்கற உரிமையா”
”தோழிங்கற உரிமை”
”தோழி” என அவள் இளப்பமாக சொல்லி சலிப்பாக சிரித்துவிட்டு கையில் பெட்டியுடன்
”குட் பை” என சொல்லிவிட்டு கிளம்ப கோவலன் அதிர்ந்தான்.
என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் திண்டாடினான், அவளோ வாசற்படி வரை சென்றுவிட்டாள், சட்டென ஓடிச் சென்று அவளின் கையை பற்றி இழுத்தான் அவளோ வியந்து