(Reading time: 20 - 39 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”என்ன” என கேட்க

  

”மாதவி வர்ற வரைக்கும் நீ இங்கயே இரு, அவள் வந்து நீ எங்கன்னு கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது, அந்த காரணத்தை வைச்சி அவள் என்னை விட்டு பிரிஞ்சி போயிடுவா, எக்காரணம் கொண்டும் நான் மாதவியை இழக்ககூடாது, தயவு செஞ்சி மாதவி வர்றவரைக்கும் நீ இங்கயே இரு ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்ச அவளோ நொந்துப் போய் தன் அறைக்கு திரும்பினாள்.

  

அவள் செல்வது கூட கோவலனுக்கு பிடிக்கவில்லை, ஆனால் அவளோ அங்கு இருக்கவே பிடிக்காமல் நொந்தாள், மறுநாளில் இருந்து கண்ணகி பள்ளி டீச்சர் வேலைக்குச் செல்ல கோவலன் கடுப்பானான்

  

”ஏன் இப்படி செய்ற கண்ணகி”

  

”மாதவி வர்ற வரைக்கும் இங்க தங்கதான் சொன்னீங்க, அதுக்கு மேல நான் என்ன செய்யனும் ஏது செய்யனும்னு முடிவு எடுக்கற உரிமை உங்களுக்கு இல்லை” என சொல்லிவிட்டு பள்ளிக்குச் சென்றாள், அவள் சென்றதும் கோவலன் நொந்துப் போய் உதயமூர்த்தியை அணுகினான், பழைய படி அவரை பிரின்சிபாலாக்கிவிட்டு அவனே தாளாளர் ஆனான்.

  

கண்ணகி பழையபடி டீச்சராக சென்றும் முன்பு போல பள்ளியில் பிரச்சனை செய்யவில்லை, அவள் உண்டு அவள் வேலை உண்டு என இருந்தாள், அதுவே ஹெச்எம்மிற்கு ஆச்சர்யமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது, அவரே கூப்பிட்டு அவளை விசாரித்தும் சரிவர பதிலளிக்காமல் நழுவினாள்.

  

கல்லூரியை விட பள்ளியில் வேலை செய்வது அவளுக்கு எளிமையாக இருந்தது, நேரத்தோடு வீடு திரும்பினாள். அதனால் அவள் ஆராக்கியமாக இருந்தாள், சிரித்த முகத்துடன் பேசி பழகினாள் அதை கோவலன் ரசித்தான், பள்ளிக்குச் செல்ல அவள் நடந்து செல்வதைக்கண்டு

  

”என்கூட வா நான் உன்னை ஸ்கூல்ல இறக்கிவிடறேன்” என அழைக்க அவளோ மறுத்தாள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.