(Reading time: 20 - 39 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”வேணாம் அங்கிருக்கறவங்க நீங்க யார்ன்னு என்கிட்ட கேட்டா பதில் சொல்றது கஷ்டம்“

  

”இதுல கஷ்டப்பட என்ன இருக்கு கோவலன்னு சொல்லு”

  

”நீங்க எனக்கு என்ன ஆகனும்னு கேட்டா என்ன பதில் சொல்றது”

  

”சொல்லு உன் ஹஸ்பென்ட்ன்னு” என சட்டென சொல்லிவிட்டு பின் அவனே நொந்துப் போய்

  

”நீ நடந்தே ஸ்கூலுக்குப் போ உடம்பு கரையட்டும்” என சொல்ல அவளோ தன்னையே ஒரு முறை பார்த்துவிட்டு

  

”நான் என்ன குண்டாவா இருக்கேன் உடம்பு கரையறதுக்கு”

  

”குண்டா இல்லைதான் ஆனா தேவையில்லாத கொழுப்பு உன் உடம்புல இருக்கு அதுவாவது கரையட்டும்”

  

”என்னை டிராப் பண்றதா சொன்னீங்களே” என்றாள் நக்கலாக அவனோ

  

”சாரி அந்த எண்ணத்தை நானே ட்ராப் பண்ணிட்டேன், எனக்கு கல்லூரியில நிறைய வேலையிருக்கு நான் கிளம்பறேன், ஈவ்னிங் பார்க்கலாம்” என அவசரமாக சொல்லிவிட்டு அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.

  

அவனது வேகத்தைக்கண்ட கண்ணகிக்கு சிரிப்பாக இருந்தது ஆனாலும் எதையோ நினைத்து சோர்ந்துப் போனாள், பள்ளிக்கு சென்று பாடம் கூட எடுக்க இயலாமல் போனாள், எப்போதடா பள்ளி முடியும் என காத்திருந்து வீடு திரும்பினாள்.

  

”மாதவி நீ எங்கடி இருக்க, எனக்கு உன் துணை அவசியம் தேவை” என புலம்பிய போது கோவலன் வந்து சேர்ந்தான்

  

”சரியா சொன்ன கண்ணகி, எனக்கும் மாதவியோட துணை அவசியம் தேவை” என சொல்ல

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.