”எங்க அடி பார்க்கலாம்” என சொல்ல அவளோ அவனை அடிக்க வர அவனோ தப்பித்து ஓட என அந்த வீட்டையே இருவரும் சுற்றி வந்து சுற்றி வந்து களைத்துப் போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து மூச்சிரைத்தார்கள்
”தோத்துட்டியே கண்ணகி” என சொல்லி கலகலவென சிரித்தவனைக்கண்டு கோபத்தில் பேசினாள்
வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
இதைக்கேட்டு அவனுக்கு பாதி விளங்கி மீதி விளங்காமல் திருதிருவென விழிக்க அவளோ அதற்கான விளக்கத்தையும் சொன்னாள்
மனையாளோடு வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது. கீழானவர்களோடு சேரக்கூடாது. அவர்களைக் குறை கூறக் கூடாது. மனமே! பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.