அவங்க இரண்டுப் பேரும் சொன்னது எல்லாம் இருக்கட்டும், உன் விவேக் அண்ணா ஒரு தடவையாவது பாரதி பத்தி ஏதாவது சொன்னாரா?”
“சின்ன அண்ணன் இதை எல்லாம் வெளியே சொல்ற ஆளா என்ன மேடம்? ஆனாலும் மனசுக்குள்ள ஃபீல் செய்வார்...”
“அது சரி...!!!”
மது தன் ஹான்ட்பேகில் இருந்து ஒரு பேப்பரை வெளியே எடுத்து இருவருக்கும் பொதுவாக காண்பித்தாள்.
“அண்ணி, மேடம், இது என்னன்னு தெரியுதா? நான் அன்னைக்கு அனுப்பின டெக்னிகல் பேப்பருக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சிருக்கு... இதை உங்க கிட்ட சொல்ல தான் அவசரமா வந்தேன்...”
“வாவ், சூப்பர் மது... கங்கிராஜூலேஷன்ஸ்...” என்று பாரதி சொல்ல,
“கங்கிராட்ஸ் மது... வெரி குட்...!” என்றாள் பவித்ரா!
“தேங்க்ஸ் அண்ணி... தேங்க்ஸ் மேம்... உங்க இரண்டு பேருக்கு தான் நான் இதுக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லனும். எனக்கு இந்த ப்ரைஸ் கிடைக்க காரணமே நீங்க தான்...”
“நோ மது, உன் கிட்ட திறமை இல்லாம இருந்தா நாங்க எதுவும் செய்திருக்க முடியாது. உன்னுடைய திறமையை வெளியே கொண்டு வந்தோம்னு வேணா சொல்லலாம்...” என்றாள் பவித்ரா.
“பவி சொல்றது ரொம்ப சரி மது...” என பாரதியும் சொன்னாள்!
“நீங்க இரண்டு பேரும் சொன்னால் சரி தான்...!" என்ற மது, ஏதோ நினைவு வந்தவளாக பாரதி பக்கம் பார்த்து, "அண்ணி, சொல்ல மறந்துட்டேனே நேத்து லாவண்யா வீட்டுக்கு வந்திருந்தாங்க... அன்னைக்கு ஃபங்க்ஷன்ல உங்களை பார்க்க முடியலைன்னு நேத்து