(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

சென்று தான் பார்த்து விடலாமே என்ற முடிவிற்கு வந்தாள்!

  

🌼🌸❀✿🌷

   

பவித்ரா, பாரதி இருவரும் ஒரு கேப் பிடித்து நுங்கம்பாக்கத்தில் இருந்த லாவண்யாவின் ஆபீஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்கள்!

    

லாவண்யா கிட்ட என்ன கேட்கப் போற பாரு?” என தோழியிடம் கேட்டாள் பவித்ரா.

  

தெரியலை பவி... தனியா ப்ளான் எல்லாம் இல்லை. ஆனால் அவக் கிட்ட நேரா பேசுறது நல்லதுன்னு தோணுது...”

  

ம்ம்ம்... எதுவா இருந்தாலும் யோசிச்சு பொறுமையா செய்...”

  

இருவரும் கேபில் இருந்து இறங்கி ஒன்றாக அந்த அலுவலக கட்டிடத்தின் உள்ளே சென்றார்கள். அங்கிருந்த ஃபிரன்ட் டெஸ்க்கில் லாவண்யாவை பார்க்க வந்திருப்பதாக அவர்கள் சொல்லவும், கிட்டத்தட்ட தனி அலுவலகம் போல இருந்த மாடிப் பகுதிக்கு அவர்களை செல்ல சொன்னார்கள்.

   

மாடிப் பகுதிக்கு வந்தால், அங்கே தனி ரிசப்ஷன் டெஸ்க் இருந்தது! அங்கே இருந்த வரவேற்பாளரிடம் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் பர்சனல் விஷயமாக லாவண்யாவை சந்திக்க வந்திருப்பதாக பாரதியும், பவித்ராவும் தெரியப்படுத்தினார்கள். அவர்கள் இருவரின் விவரங்களை கேட்ட அந்த வரவேற்பாளரிடம் இருவரும் விவரங்களை சொல்ல தொடங்கும் போது,

  

மேடம், நீங்க விவேக் சாரோட ஒய்ஃப் தானே?” என்று சொன்ன ஒரு குரல் பாரதி, பவித்ரா இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது!

  

அவர்கள் பார்த்த இடத்தில் ஒரு இளம் பெண் இருந்தாள்! அவள் யார் என்று அடையாளம் தெரியாமல், பாரதி கேள்வியாக பார்க்கவும்,

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.