(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இது எல்லாம் செய்ய மாட்டேனா?”

  

லாவண்யா இயல்பான புன்னகையோடு இப்போதும் பேச, பாரதி தயக்கத்துடன் அடுத்த கேள்வியை கேட்டாள்.

  

அவர்.... நிஜமாவே என்னை விரும்பினாரா?”

  

நல்ல கேள்வி தான் கேட்டீங்க! அதுவும் கல்யாணம் ஆகி இத்தனை மாசத்துக்கு அப்புறம்!” என்றாள் லாவண்யா சிரிப்போடு.

  

ஆனால் பாரதியின் முகத்தில் லாவண்யாவின் சிரிப்பு எதிரொலிக்கவில்லை... அவள் இப்போதும் குழப்பத்துடனே லாவண்யாவைப் பார்த்தாள்...

  

உண்மையாவே தான் சொல்றேன் பாரதி! விவேக்குக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருந்தது... என் கிட்ட அஃபிஷியல் விஷயமா ஃபோன் பேசும் போது கூட உங்களை பத்தி ஏதாவது சொல்லிட்டே இருப்பான்... ஆனால் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?”

  

பாரதி பவித்ராவைப் பார்த்தாள்.... பவித்ரா பாரதியே பதில் சொல்லட்டும் என்று அமைதியாக இருக்க, பாரதி ஒரு சில வினாடிகள் எடுத்துக் கொண்டு பேசினாள்.

  

அவர் தான் வேற மாதிரி சொன்னார்...”

  

அப்படி என்ன சொன்னான்?”

  

அவருக்கு என்னை பிடிக்காது, ஆனால் புது கம்பெனிக்காக தான் அப்படி பிடிக்கும்ன்னு பொய்...”

  

பாரதி பேசி முடிக்கும் முன் லாவண்யா குறுக்கிட்டுப் பேசினாள்.

  

நல்ல ஜோக்! என் கிட்ட அவனை இதையே சொல்ல சொல்லுங்க பார்ப்போம்! நிஜமாவே சொல்றேன் பாரதி, விவேக் உங்க இரண்டாவது சந்திப்பிலேயே க்ளீன் போல்ட் ஆகிட்டான்...

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.